Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லையில் 4 பற்களை பிடுங்கிய விவகாரம்.. குற்றப்பத்திரிக்கை தாக்கல் கோரிய வழக்கில் இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை: நெல்லையில், விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை குழுவின் அறிக்கையை கேட்டு தாக்கலான மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி, டிஎஸ்பி சங்கர் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Thirunelveli Ambasamudram Tooth breakage Case today hearing in Madurai High court

விசாரணை: இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. அதேபோல, சிபிசிஐடி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் யாரும் ஆஜராகாததால், சிபிசிஐடி விசாரணை அதிகாரி தலைமையில் 6 பேர் கொண்ட போலீசார் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே, ஏஎஸ்பி பல்வீர்சிங்கின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இசக்கிமுத்து, சதாம் உஷேன் மற்றும் டிரைவர்கள் விவேக், ஆண்ட்ரூஸ் ஆகிய 4 போலீசார், சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமும் தந்திருந்தனர்.

மனு தாக்கல்: இந்நிலையில், அருண்குமார், மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "அம்பாசமுத்திரம் போலீசார் என் மீது பொய் வழக்கு பதிவு செய்து சட்டவிரோத காவலில் வைத்து கடுமையாக தாக்கினார்கள்.. அப்போது என்னுடைய 4 பற்களும் உடைக்கப்பட்டன... என்னை போல் வேறு சில விசாரணை கைதிகளின் பற்களையும் டிஎஸ்பி பல்வீர்சிங் பிடுங்கி சித்திரவதை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் சிபிசிஐடி விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், அம்பை போலீஸ் மார்ச் 10 ம் தேதி கேமிரா பதிவுகளை வழங்கவும், என்னுடைய பற்கள் உடைக்கப்பட்டதற்கு இழப்பீடு வழங்கவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி அமுதா மற்றும் நெல்லை துணை கலெக்டர் அறிக்கைகளை எனக்கு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இன்று விசாரணை: இந்த மனுவை, கடந்த வாரம், நீதிபதி டி.நாகர்ஜூன் விசாரித்ததுடன், மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை, 29ம் தேதிக்கு, அதாவது இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார். எனவே, இந்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், பல் பிடுங்கிய விவகாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+