தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்
சென்னை: தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது என நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கூறினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் என்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் முன்பாகவே தீபம் ஏற்றப்படும். ஆனால் நடப்பு ஆண்டில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உச்சிப் பிள்ளையார் கோயில் முன்புள்ள தீபத்தூணில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில் அதனை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் தான், இரண்டாவது வழக்காக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடுகள் செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடிய வழக்கு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தலைமையில் நடந்து வருகிறது.
இதில் தற்போது அரசு தரப்பு வாதம் வைத்து வருகிறது. 'விளக்கம் கேட்டு அரசு அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். 4 வாரங்கள் கால அவகாசம் வழஙக் வேண்டும்' என அரசு தரப்பினர் நீதிபதியிடம் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் கோவில் தரப்பு அரசு வழக்கறிஞர்கள் கூட சற்று கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்திருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தார். தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அப்போது அரசு தரப்பில் ஜோதி என்பவர் ஆஜராகி, டெல்டா பகுதிகளில் அதி கனமழை.. நானும் பக்தி மான் தான். தயவு செய்து இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும். உணர்வுப்பூர்மான விஷயம் என்பதால் இதனை கருத்தில் கொண்டு நீதிபதி வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று தங்களது கருத்தை தெரிவித்தனர்.
தொடர்ந்து அரசு தரப்பில், திருப்பரங்குன்றம் விவகாரம் மாநிலம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதான வழக்கு குறித்து மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அந்த விசாரணைக்கு பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications