திருப்பரங்குன்றம் வழக்கு.. மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல.. தமிழக அரசு வைத்த முக்கிய வாதம்!
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று தமிழக அரசு முக்கிய வாதத்தை முன் வைத்துள்ளது. மலை உச்சியில் தீபத் தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தமிழக அரசு வாதிட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு கோயில் நிர்வாகம்தான் அனுமதி அள்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவகர் சார்பாகவும், மாவட்ட ஆட்சியர் சார்பாகவும் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி மறுத்தனர். தொடர்ந்து, பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், அமைதியாக இருங்கள் என்று நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து அரசு தரப்பில் வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும்.
தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்திற்கு அருகில் தர்கா இருக்கிறது. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் நடைமுறைகளே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. அதேபோல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கடந்த 73 ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. 1994ல் இருந்தே பிரச்சனை ஏற்பட்டது. தீபம் ஏற்றுவது தொடர்பாக பொதுநல வழக்கு தால்க்க்கல் செய்யப்பட்டு, 2014ல் விரிவான தீர்ப்புகள் வந்துள்ளன. அதேபோல் மலை உச்சியில் இருப்பது சர்வே தூண் தான். மலையில் நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானது. மற்றவை கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது.
மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரும் மனுவில் உள்நோக்கம் உள்ளது. பிரச்சனை பெரிதாகி இருப்பதால், மக்களின் நலன் கருதி அரசு சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. நிலைமையை சீர்படுத்தவே 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். மதநல்லிணக்கம் மற்றும் பொது அமைதியை மனதில் வைக்க வேண்டும் என்று வாதங்கள் முன் வைக்கப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications