திருப்பரங்குன்றத்தில் அரோகராவுக்கு பதில்.. பாரத் மாதா கி ஜெய் என கோஷமிட்ட இந்துத்துவா அமைப்பினர்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற, சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் இந்துத்தவா அமைப்பினருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை பகுதியில் கலவரம் வெடித்தது. இதில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவர்கள் அரோகரா என்பதற்கு பதில், பாரத் மாதா கி ஜெய் என கோஷம் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் இன்று கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக முருகனின் அறுபடை வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதும் தீபம் ஏற்றப்பட்டு இருக்கிறது. வழக்கமாக மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டும் இதேபோல தீபம் ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகினர்.
வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வந்தது. வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், காலங்காலமாக உச்சி பிள்ளையார் கோயிலுக்கு அருகில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டும் அங்கு தீபம் ஏற்றப்படும். ராம ரவிக்குமாரின் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனயைடுத்து நீதிபதி திருப்பரங்குன்றம் மலையில் ஏறி ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து டிச.1ம் தேதி, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில், கார்த்திகை தீபம் நாளில்(டிச.3) தர்காவுக்கு அருகில் உள்ள தீப தூணிலும் ஏற்றலாம் என்று தெரிவித்திருந்தார். ஆனால், தூணில் தீபம் ஏற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி, ராம ரவிக்குமார் சார்பில், நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபம் ஏற்ற ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
மறுபுறம் கோயிலுக்கு வெளியில் கூடியிருந்த இந்துத்துவா அமைப்பினர், தடுப்புகளை உடைத்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைய முயன்றனர். இதில், 2 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல, தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த இந்துத்துவா அமைப்பினர், வழக்கமாக பக்தர்கள் முழங்கும் அரோகரா முழக்கத்திற்கு பதில் பாரத் மாதா கி ஜெய் என்று முழங்கினர். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications