Thiruparankundram: "தலைமை செயலாளர் நேரில் ஆஜராகணும்.." திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை உச்சியில் தீபத்தை ஏற்றுமாறு உத்தரவிட்ட நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தத் தவறியதாக மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோர் மீது ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்றைய தினம் இதை விசாரித்த நீதிபதி வரும் டிசம்பர் 17ம் தேதி தலைமைச் செயலாளர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
முருகன் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் . இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். வழக்கமாக இந்தக் கார்த்திகை தீபம் உச்சி பிள்ளையார் கோயிலுக்கு அருகே தான் ஏற்றப்படும்.

திருப்பரங்குன்றம்
ஆனால், இந்த முறை கார்த்திகை தீபத்தை உச்சி பிள்ளையார் கோயிலுக்குப் பதிலாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், மனுதாரர் குறிப்பிட்ட இடம் தர்காவுக்கு மிக அருகே இருப்பதாகச் சொல்லி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், பல ஆண்டுகளாகவே உச்சி பிள்ளையார் கோயில் அருகிலேயே தீபம் ஏற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மலை உச்சியில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். ஆனாலும், கார்த்திகை தீபம் நாளில் உச்சி பிள்ளையார் கோயிலிலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. அப்போது சிஐஎஸ்எஃப் வீரர்கள் உதவியுடன் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி சுவாமிநாதனை திமுகவால் பதவி நீக்கம் செய்ய முடியுமா? ரூல்ஸ் என்ன? அடுத்து என்ன நடக்கும்
தமிழ்நாடு அரசு
இருப்பினும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டதாகச் சொல்லி அன்றைய தினமும் அனுமதி மறுக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இறுதியில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை செய்வதாகக் கடந்த டிசம்பர் 4ம் தேதி ஐகோர்ட் மதுரை அமர்வு உத்தரவிட்டது.
இதையடுத்து அன்றைய தினமே மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜிஆர் சுவாமிநாதன் விசாரணைக்கு எடுத்தார். அப்போது மனுதாரரே மலையின் மீது ஏறி தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருந்தார். மேலும், இதற்கான பாதுகாப்பை மதுரை போலீசார் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், தீபம் ஏற்றியது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அன்றைய தினமும் திருப்பரங்குன்றத்தில் அதிகளவில் மக்கள் கூடினர்.
மறுப்பு
ஆனாலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகச் சொல்லி, தமிழக அரசு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. அதன்படி மறுநாளே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், அவசர வழக்காகவும் விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அந்த மனு இதுவரை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
வைத்த கோரிக்கை
இந்தச் சூழலில் தான் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராம ரவிகுமார் தாக்கல் செய்த இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரத்தில் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது என்றும் எனவே, அதன் பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை விசாரிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
3 மணிக்கு உத்தரவு
அரசு தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் வழக்கு விசாரணையைத் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார். அதற்குள் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை கிடைக்காத பட்சத்தில், வழக்கைத் தான் தொடர்ந்து விசாரிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே பல காலம் காத்திருந்துவிட்டோம்.. இனிமேல் காத்திருக்க முடியாது என்றார்.
ஆனாலும், மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருப்பதால் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என அரசு தரப்பு வாதத்தை முன்வைத்தது. இதையடுத்து சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகச் சொல்லி வழக்கு விசாரணையைப் பிற்பகல் 3 மணிக்கு நீதிபதி சுவாமிநாதன் ஒத்திவைத்தார்.
நேரில் ஆஜராக உத்தரவு
பிற்பகல் 3 மணிக்கு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தலைமைச் செயலாளர், சட்ட ஒழுங்கு கூடுதல் தலைவர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டார். வரும் டிசம்பர் 17ம் தேதி ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். அதேபோல மதுரை மாநகர இணை ஆணையர் இனிகோ விளக்கமளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications