Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம்: மலை உச்சி தீபத் தூணில் இன்று உடனே தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுத்த இரு நீதிபதிகள் அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் என உத்தரவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். அப்போது, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில் கார்த்திகை தீபத்தன்று வழக்கத்திற்கு மாறாக மலைஉச்சியில் தர்கா அருகில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை செய்து 3 நாட்களுக்கு முன்பாக தீர்ப்பு வழங்கினார்.

thirupparankundram high court

அதில், வழக்கமாக ஏற்ற கூடிய மோட்ச தீபம் என்று சொல்லக்கூடிய இடத்தில் மட்டுமல்லாமல் வரும்காலங்களில் தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த உத்தரவை நடைமுறைபடுத்தவில்லை என நேற்று காலையிலேயே ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி அறுவுறுத்தலின் படி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று மாலை இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை அரசு முறையாக அமல்படுத்தவில்லை. எனவே உயர்நிதிமன்ற மதுரை கிளையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்பில் இந்த தீபத்தை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழக அரசு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தலைமை நீதிபதி முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டது. நிர்வாக நீதிபதி ஜெய்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் முறையீடு செய்ய வலியுறுத்தினார். அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்தனர். இந்த வழக்கு இன்று காலை விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் இன்று காலை முதல் வாதங்கள் நடந்த நிலையில், சற்று முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு கடமையைச் செய்ய தவறியதாலேயே CISFஐ பாதுகாப்பிற்காக செல்ல உத்தரவிடப்பட்டது என இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

மேலும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராம ரவிக்குமார் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் விசாரிப்பார் என்றும் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் விசாரணையை தொடங்கினார். தீபம் ஏற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பிறகு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க வேண்டும் என அரசுத் தரப்பு வாதம் வைத்தது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எனது உத்தரவால் யாரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். நீதிபதிகளிடம் ரவுத்திரம் பழக வேண்டாம், என்னுடைய தீர்ப்பால் யாருக்கும் பிரச்சனை இல்லையே, நீதிமன்றத்திற்கு உரிய மரியாதை வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.

உணர்வுப் பூர்வமான விஷயம் என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும்; 4 வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும்; சட்டப்படி உரிய பதில் அளிப்போம் என அரசுத் தரப்பு வாதத்தை முன்வைத்தது. அதற்கு நீதிபதி சுவாமிநாதன், 4 வாரம் நேரம் கொடுத்தால் மட்டும் என்ன செய்வீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

அதையடுத்து, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் கோயிலின் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும்; நீதிமன்றத்தின் மதிப்பு புரிய வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்கிறேன் என உத்தரவிட்டார். இதையேற்று, மாநகர காவல் ஆணையர் காணொளிக் காட்சி வாயிலாக ஆஜராகினார். அவரிடம் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிடுள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் மனுதாரர் (இந்து மக்கள் கட்சித் தலைவர்) இன்றே தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடர்பான அறிக்கையை நாளை காலை சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+