"திருப்பரங்குன்றம் மலையில் இந்து முஸ்லீம் திருவிழாக்கள்!" ஐகோர்ட் மதுரை அமர்வு சொன்ன முக்கிய கருத்து
மதுரை: திருப்பரங்குன்ற மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டை ஐகோர்ட் மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்து முஸ்லீம் சமூகங்கள் அங்கு ஒருவருக்கு ஒருவர் இடையூறு இல்லாமல் திருவிழாக்களைக் கொண்டாடுவது தொடர்பாகவும் நீதிபதிகள் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்படும். அது வழக்கமாக அங்குள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும் நிலையில், தீபத்தை மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்ற தனி நீதிபதி மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

மேல்முறையீடு ரத்து
இருப்பினும், தனி நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் கேகே ராமகிருஷ்ணன் விசாரித்தனர். இரு தரப்பு விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் வேறு சில முக்கிய விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்து, முஸ்லிம் சமூகங்கள் தங்கள் திருவிழாக்களை ஒருவருக்கொருவர் இடையூறின்றிக் கொண்டாடத் தேவையான வழிகாட்டுதல்களைத் தங்களது விரிவான தீர்ப்பில் வழங்கியுள்ளதாகவும் அதைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. நீதிபதிகள் அளித்த விரிவான தீர்ப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மேலும் பல முக்கிய பாயிண்டுகள் இருக்கும் எனத் தெரிகிறது.
மக்களுக்கு அனுமதி இல்லை
மேலும், அங்குத் தொன்மையான சின்னத்தைப் பாதுகாக்கும் தொல்லியல்துறை நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தீபத்தூணில் விளக்கேற்றும் நிகழ்வின்போது அங்குச் செல்லப் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்ற நீதிபதிகள் இதனை மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்து-முஸ்லீம்
உயரமான இடத்தில் தீபம் ஏற்றுவது இந்து பக்தர்களுக்கு ஒரு பொதுவான மற்றும் நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் ஒரு நடைமுறை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோன்ற வழக்கம் இருக்கும் போது, பக்தர்களின் கோரிக்கையைக் கோயில் நிர்வாகம் ஏற்க மறுக்க எந்த நியாயமான காரணமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. தீபம் ஏற்றப்பட்டால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்ற மாநில அரசின் வாதம், வெறும் கற்பனையே என்று அமர்வு கடுமையாக விமர்சித்தது. இவை சமூகத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஏற்க மறுப்பு
இறுதியாகத் தீபத்தூணில் கோயில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மலை உச்சியில் இருக்கும் குறிப்பிட்ட அந்தத் தூண் சர்வே தூண் தான் என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த வாதத்தை ஐகோர்ட் மதுரை அமர்வு ஏற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. அதேநேரம் மலை உச்சியில் எப்போது தீபத்தை ஏற்க வேண்டும் என்பது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் நீதிமன்றம் கூறவில்லை. இதனால் அடுத்தாண்டு கார்த்திகை மாதமே தீபம் ஏற்றப்படும் எனத் தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications