திருப்பரங்குன்றத்தில் வெடித்த கலவரம்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த உத்தரவு என்ன? விவரம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி பிள்ளை கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணிலும், கார்த்தி தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த உத்தரவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில், "மதுரை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், இந்த ஆண்டு முதல் கோயில் உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அது செயல்படுத்தாமல் வந்ததால் நீதிமன்றத்தில் நாங்கள் இன்று மதியம் முறையிட்டிருந்தோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்காக நீதிபதி தாக்கல் செய்ய சொல்லி இருந்தார்.

வழக்கை தாக்கல் செய்த பின்னர், வழக்கு விசாரணை மதியம் 3 மணிக்கு வந்தது. விசாரணைக்காக கோயிலின் இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலரையும், மதுரை மாநகராட்சி ஆணையரையும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராக சொல்லியிருந்தார் நீதிபதி. ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. அதேபோல இந்த வழக்கு விசாரணையை மாலை 6.05 மணிக்கு எடுத்துக் கொள்வதாகவும், அதுவரை தீபம் ஏற்றப்படுகிறதா என்பதற்கு நேரம் வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால், மாலை 6.05 மணிக்கு பின்னரும் தீபம் ஏற்றப்படவில்லை. எனவே மத்திய தொழில் பாதுகாப்பு படை உடன் மனுதாரர்கள் ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்று தீபம் ஏற்றலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த வழக்கு மீண்டும் நாளை மதியம் விசாரணைக்கு வருகிறது" என்று கூறியிருக்கிறார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications