மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. நெல்லை சென்ற ஆம்னி பஸ்சில் துடிதுடித்த பயணிகள்.. 3 பேர் பலி
மதுரை: மதுரை அருகே கொட்டாம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆம்னி பஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த பஸ் விபத்தில் செங்கல்பட்டை சேர்ந்த சுதர்சன், தூத்துக்குடியை சேர்ந்த கனகரத்தினம் மற்றும் திவ்யா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நின்று கொண்டிருந்த பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்னி பஸ் மோதி விபத்து
தமிழகத்தில் அண்மைக்காலமாக அடிக்கடி பஸ்கள் விபத்து நடந்து வருகிறது. ஆம்னி பஸ்களின் டிரைவர்கள் கவனக் குறைவாக செயல்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. இதனால் பஸ்களில் செல்லும் பயணிகள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. மதுரை கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு ஏற்கனவே சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு ஆம்னி பஸ்சானது சாலையோரம் நின்று கொண்டிருந்தது.
பயணிகள் டீ குடிப்பதற்காக நின்றதா
பயணிகள் டீ குடிப்பதற்காக அந்த பஸ்சானது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி முழுக்க சேதமடைந்தது. நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்புறம் சேதமடைந்தது.
தூத்துக்குடியை சேர்ந்த பெண் பலி
இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செங்கல்பட்டை சேர்ந்த சுதர்சன், தூத்துக்குடியை சேர்ந்த கனகரத்தினம் மற்றும் திவ்யா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பஸ் விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications