Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றத்தில் போராடியவர்களை.. போலீஸ் அப்புறப்படுத்தியதும்.. கை தட்டி கொண்டாடிய மதுரை மக்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்ல CISF வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. திருப்பரங்குன்றத்தில் பதற்றம் நிலவும் நிலையில் தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா அங்கே முகாமிட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று கலவரம் செய்யும் தொணியில் போராட்டம் செய்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு போது அங்கிருந்த மக்கள் பலர் அதை கைதட்டி வரவேற்றனர்.

அங்கிருந்த மக்கள் கூடி போலீசாருக்கு கைகொடுத்தனர். கூட்டம் அகற்றப்பட்ட உடன் போலீசாரை பாராட்டும் விதமாக கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.

திருப்பரங்குன்றம் - என்ன நடந்தது?

நேற்று திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார். நேற்று மாலை இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியும், தீபத்தூணில் விளக்கு ஏற்றாத காரணத்தால் பதற்றம் ஏற்பட்டது.

Tiruparangundram Residents of Madurai celebrated the arrest of the goons by police

இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர். ஆனால் போலீஸ் அவர்களை அனுமதிக்காத நிலையில் CISF வீரர்களுடன் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார் இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று CISF வீரர்களை அழைத்துக்கொண்டு பல்வேறு இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்காத போலீஸ் அதிகாரிகள் We're not allowing...We'll face the consequences என்று குறிப்பிட்டனர்.

போலீசார் ஆக்சன் - மக்கள் கைதட்டல்

இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த நிலையில் நேற்று கலவரம் செய்யும் தொணியில் போராட்டம் செய்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு போது அங்கிருந்த மக்கள் பலர் அதை கைதட்டி வரவேற்றனர். இது தொடர்பாக திமுகவின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பு ஐடி விங் செய்துள்ள போஸ்டில், வகுப்புவாதிகளின் வஞ்சக எண்ணம் ஈடேறாது! திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக ஒரு சில நாட்களுக்கு முன்பாக வழக்கு தொடுப்பதும், அதனை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிப்பதும் எதேச்சையானது அல்ல!

சமூகநீதியையும், மதநல்லிணக்கத்தையும் காக்க வேண்டிய காலகட்டத்தில் அதற்கு எதிராக, வழக்கத்துக்கு மாறாக மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்பதும், CISF வீரர்களை கூட்டிக் கொண்டு செல்ல உத்தரவு பிறப்பிப்பதெல்லாம் வஞ்சக எண்ணத்தின் உச்சம்.

ஆனால், தமிழ்நாட்டை ஆளும் திராவிட மாடல் அரசு நீதிபதியின் வஞ்சக உத்தரவுக்கு எதிராக, வழக்கம் போல உச்சி பிள்ளையார் கோவில் அருகே கார்த்திகை தீபத்தை ஏற்றியதோடு, CISF படையினரை கூட்டிக் கொண்டு வந்தவர்களுக்கு திருப்பரங்குன்றத்தில் மலையேற அனுமதியும் மறுத்துள்ளது.

அதுமட்டுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இறுதியாக சொல்லிக்கொள்வது ஒன்றுதான் வகுப்புவாதிகளின் வஞ்சக எண்ணங்கள் ஈடேற இது வடநாடு அல்ல; தமிழ்நாடு! சமூகநீதியும் மதநல்லிணக்கமுமே இந்த மண்ணில் என்றும் வெல்லும்!

வட மாநிலங்களைப் போல மதவாத அரசியல் செய்து மக்களை இங்கு பிளவுபடுத்த முடியாது. இது தமிழ்நாடு! இந்த மதச்சார்பற்ற மண்ணையும், பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட மக்களையும் காப்பது மானமிகு சுயமரியாதைக்காரர் முதல்வர் ஸ்டாலினிடம் சதிக்காரர்களின் சித்து வேலைகள் என்றும் எடுபடாது.

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச்சென்றால் பாதி வழியில் 'தீபத்தூண்' ஒன்று இருப்பதைக் காணலாம். அதிலேயே கார்த்திகை தோறும் ஊரிலுள்ள மக்கள் விளக்கேற்றி வருகிறார்கள்" என கல்வெட்டாய்வாளர் செ.போசு அவர்கள் எழுதிய திருப்பரங்குன்றம் ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ராம ரவிக்குமார் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களிலேயே இவை அனைத்தும் இருந்தும், அவற்றை மறைத்து சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் தீர்பளிக்கப்பட்டுள்ளது. சங்கிகள் எந்த வகையில் வந்தாலும், அதற்கெதிராக தமிழ்நாடு போராடும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+