திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்? மத்திய அரசை சரமாரி கேள்வி கேட்ட மதுரை ஹைகோர்ட் நீதிபதி
மதுரை: திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு மதுரை ஹைகோர்ட் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.. அத்துடன், திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை கொடுத்த நோட்டீஸ் தெளிவின்றி இருப்பதாகவும் வலுவான கண்டனத்தை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டு தயாரிக்க, நெய் சப்ளை செய்யும் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனமானது, திண்டுக்கல்லில் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் தயாரித்த நெய்யில் கலப்படம் செய்ததாக, திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் தந்திருந்தது...

அத்துடன், 4 டேங்கர் லாரிகளில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் விநியோகம் செய்ததாகவும் தேவஸ்தானம் தரப்பில் புகார் சொல்லப்பட்டது. இந்த புகாரின்பேரில், ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம் மீது திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தங்களது தயாரிப்பை சோதனைக்கு உட்படுத்த தயார் என்று இந்த நிறுவனம் அறிவிக்கவும், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் நெய்யின் தரத்தை ஆய்வு செய்ததுடன், சோதனைக்கும் எடுத்துச்சென்றிருந்தனர்.
கலப்பட நெய்: இந்நிலையில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலப்பட நெய், திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம், தெலுங்கானாவை சேர்ந்த வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்திலிருந்து அந்த நெய்யை வாங்கியதாகவும், அங்கு தயாரிக்கப்பட்டதுதான் கலப்பட நெய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது...
இதையடுத்து, கலப்பட நெய் தொடர்பாக, தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி நிறுவனத்துக்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன..
தேவஸ்தானம்: இதனிடையே, திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை கோரி அந்நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான இன்றைய தினம் நடைபெற்றது.
அப்போது மனுதாரர் சார்பில், "கடந்த 29ம் தேதி நோட்டீஸ் தந்துவிட்டு, 2 நாட்களில் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.. எங்களுக்கு ஆவணங்களை வழங்க அவகாசம் வேணடும்.. திருப்பதி நிறுவனமே எங்கள் நெய்யில் கலப்பட இலலை என்று தெரிவித்துவிட்டது" என்று வாதிடப்பட்டது.
இதற்கு நீதிபதி சதீஷ் குமார் "ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன? எந்த அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது? சுப்ரீம் கோர்ட் சொன்னது போல அரசியலிலிருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும்.
விளக்கம்: ஒரு நோட்டீஸ் அனுப்பினால், அதற்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அவர்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டாமா ?
சம்பந்தப்பட்ட நிறுவனம் என்ன விதிமீறல் செய்தது? என்ற எந்த விபரமும் நோட்டீசில் இல்லை. நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்புத்துறை எந்த சட்ட அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது? நெய் சோதனையில் குஜராத் ஆய்வகம் கொடுத்த அறிக்கைக்கும், சென்னை கிங்க்ஸ் ஆய்வக அறிக்கைக்கும் நிறைய முரண்பாடு உள்ளது. சென்னை ஆய்வில் கலப்படம் இல்லை என்று வந்துள்ளது.. அதுவும் அரசு நிறுவனம்தானே?
நிவாரணம்: அப்படியிருந்தும்கூட, மத்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் நடத்திய சோதனை முடிவுகளை ஏன் வெளியிடவில்லை? அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு புதிய நோட்டீஸ் அளிக்க வேண்டும். இதற்கு பதிலளிக்க 14 நாட்கள் அவகாசமும் வழங்க வேண்டும்... உரிய அவகாசத்தில் நிறுவனம் உரிய விளக்கம் அளித்து நிவாரணம் பெறலாம். அதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது" என்று நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கையும் ஒத்திவைத்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications