மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?
மதுரை: அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் மதுரை தெற்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்த மதுரை தெற்கு தொகுதியில், லோக்சபா தேர்தலின் போது பாஜக கூடுதல் வாக்குகளை பெற்றது. இதனால் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக வெல்லுமா? அங்குள்ள கள நிலவரம் என்ன என்பது தொடர்பாக பார்க்கலாம்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை தெற்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை தெற்கு தொகுதியை பொறுத்தவரை 2021ஆம் ஆண்டு திமுக கூட்டணி சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் பூமிநாதன் சுமார் 6,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை மீண்டும் மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதனே போட்டியிடுவார் என்று தெரிகிறது.

அதிமுகவை முந்திய பாஜக
மதிமுக சார்பாக அளிக்கப்பட்ட விருப்ப பட்டியலிலும் பூமிநாதனுக்காக மதுரை தெற்கு தொகுதி முதலிடத்தில் இருந்தது. தற்போது பாஜகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதால், இந்த தொகுதி யாருக்கு சாதகம் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் அதிமுகவை விடவும் பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தது.
பாஜக வேட்பாளர் யார்?
அப்போது மதுரை தெற்கு தொகுதி மீது பாஜக நிர்வாகிகள் கண் வைத்தனர். இதனால் பாஜக நிர்வாகி ராம சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. இவருக்கு முன்னாள் மாநகரச் செயலாளர் கேகே சீனிவாசனும், மகாலட்சுமியும் போட்டி கொடுப்பார்கள் என்று தெரிகிறது. இங்கு செளராஷ்டிரா மக்களின் வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது.
மதுரை தெற்கில் மீண்டும் பூமிநாதன்?
ஆனால் முக்குலத்தோர் சமூக வாக்குகள் தான் வெற்றி, தோல்வியை முடிவு செய்யும். அந்த வகையில் பூமிநாதன் கை ஓங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தொகுதியில் பரீட்சியமான நபராக மாறியுள்ள பூமிநாதன், நீண்ட காலமாக இருந்து வந்த பட்டா பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். சுமார் 60 ஆயிரம் பேருக்கு பட்டா வாங்கி கொடுத்துள்ளார்.
களத்தில் அசத்தும் பூமிநாதன்
அதேபோல் தொகுதியில் இருந்து யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் தவறாமல் பங்கேற்பவர். ஒருவேளை பங்கேற்க முடியவில்லை என்றால், அடுத்த சில நாட்களில் வீடு தேடி செல்லும் வழக்கம் கொண்டவர். என்னதான் அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு ஓரளவிற்கு கிடைக்கும் என்றாலும், அந்த தொகுதியில் அதிமுகவினர் பலரும் பூமிநாதனின் உறவினர்கள் தான்.
விஜய் பிரிக்கும் வாக்குகள்
இன்னொரு பக்கம் செளராஷ்டிரா இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகளை விஜய்யும் கணிசமான அளவிற்கு பிரிக்கிறார். இதனால் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு உருவாகும் என்று கருதப்படுகிறது. இதனால் மதுரை தெற்கு தொகுதியை மையமாக வைத்து பாஜக பல்வேறு பணிகளை மேற்கொண்டாலும், பூமிநாதனின் கள செயல்பாடுகள் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications