Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதரவற்ற விதவை சான்றிதழ் பிரச்சனைக்குத் தீர்வு! சு.வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என விதிகள் இருந்து வந்தன. இந்த விதிகளில் குழப்பம் இருப்பதாகவும், இதனை விளக்கி புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆதரவற்ற விதவைகளுக்காக தமிழக அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.1000 உதவித்தொகையை தகுதியான பெண்கள் பெற முடியும். தமிழக அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகையை பெற இதற்கான சான்றிதழை பெற வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க பல விதிகள் இருக்கின்றன. இதில் குழப்பம் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

tn government su venkatesan

இந்த சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்பதற்கு, மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அர்த்தமா? என்று கேள்வி எழுந்திருந்தது. இது குறித்து சிபிஎம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆதரவற்ற விதவைகளுக்கு தமிழ்நாட்டில் கோட்டாட்சியர்/ சார் ஆட்சியர் நிலையில் ஆதரவற்ற விதவை சான்று வழங்கப்பட்டு வருகிறது என்றும், அச்சான்று வழங்குவதற்கு எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற பொருத்தமில்லாத நிபந்தனைகளை தளர்வு செய்து, ஏழை எளியவர்களுக்கு எளிதாக சான்று கிடைத்திட வழிவகை செய்யுமாறு கோரியுள்ளார் என்பதன் அடிப்படையில் ஆதரவற்ற விதவை சான்று வழங்குவதற்கு அரசு, கடிதத்தில் கீழ்க்கண்டவாறு தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.

tn government su venkatesan
tn government su venkatesan

"இந்நேர்வு தொடர்பாக அரசாணை (நிலை) எண் 225, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் (எம்) துறை, நாள் 08.03.1984-ல், The expression "destitute widows" is defined as one who has neither any means by herself to live on nor any dependent to protect her from starvation என வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆதரவற்ற விதவை சான்று வழங்குவதற்கு எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பதற்கு மகன் / மகள் ஆகியோர் துணையில்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல என தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், அவர்கள் இருந்தும் அவர்களால் ஆதரவற்ற விதவையின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அணுகூலமும் கிடைக்காமல் ஆதரவற்ற நிலையில் இருப்பது என்றே பொருள்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக அரசின் இந்த விளக்கத்திற்கு சு.வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்துள்ளார். தனது x தளத்தில், "ஆதரவற்ற விதவை சான்றிதழ் தொடர்பாக நான் எழுப்பிய பிரச்சனைக்கு தீர்வு. புதிய சுற்றறிக்கை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி.

ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதில் நடைமுறையில் பல பிரச்சனைகள் இருந்து வந்தது. குறிப்பாக அச்சான்றிதழ் வழங்க எவ்வித துணையுமில்லாமல் வசிக்க வேண்டும் என்பது போன்ற பொருத்தமற்ற நிபந்தனைகள் இருந்தன. இவ்வித நிபந்தனைகளில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராகேஷ் கக்காணி எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித துணையுமில்லாது இருக்க வேண்டும் என்பதற்கு மகன் அல்லது மகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நடைமுறையில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெறுவற்கு தடையாக இருந்த முக்கியமான பிரச்சனை இச்சுற்றறிக்கையின் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது. இது ஆதரவற்ற பெண்கள் எண்ணற்றோருக்கு பெரும் பலன் தரக்கூடிய ஒன்று. எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+