ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!
மதுரை: விதிகளை மீறும் கல் குவாரிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் பல குவாரிகள் மூடப்பட்ட நிலையில், மதுரையில் இன்று 11 குவாரிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த இரண்டு கல்குவாரிகளை தற்காலிகமாக மூடும்படி தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். பொதுமக்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 15 கல்குவாரிகளை புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ட்ரோன் உதவியுடன் ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக, மே 25 அன்று அமைச்சர் டி.கே.பிரபு கன்னியாகுமரி மாவட்டத்தில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் அளித்த அறிவுறுத்தலின்படியும், ட்ரோன் ஆய்வறிக்கையின் அடிப்படையிலும், ஆய்வு செய்யப்பட்ட 15 குவாரிகளில் விதிகளை மீறி செயல்பட்ட 2 கல்குவாரிகள் உடனடியாக மூடப்பட்டன. இந்த விதிமீறல்களின் தீவிரம் குறித்த விரிவான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்.
மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சமர்ப்பிக்கும் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது மதுரையிலும் 11 குவாரிகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்றிருக்கிறது. மூடப்பட்ட குவாரிகள் அனைத்தும் விதிமீறல் குற்றச்சாட்டில் சிக்கியவை. எனவே இந்த குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது, விதி மீறலில் ஈடுபட்டதற்காக கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications