பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் துணி உறையுடன் கம்பளி போர்வை.. பூரிப்பில் மதுரை.. ரயில் பயணிகள் குஷி
மதுரை: பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகள் உச்சக்கட்ட சந்தோஷத்தில் உள்ளனர். புதிய வசதியை வரவேற்று ரயில்வேக்கு நன்றியும் தெரிவித்து வருகிறார்கள். என்ன காரணம் தெரியுமா? ரயிலில் துணி உறையோடு கம்பளி வழங்கும் திட்டம் முதன்முறையாக மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை மற்றும் தலையணைகள் வழங்கப்படுகின்றன.. பழுப்பு அல்லது கருப்பு நிற கம்பளி போர்வை, படுக்கை விரிப்பு, 1 தலையணை இவையாவும் ஒரே தொகுப்பாக, ஏசி பெட்டிக்காக வழங்கப்படுகின்றன.

ரயில்வே நிர்வாகம்: அந்தவகையில், இந்தியா முழுவதும் ரயில்களில் தினம் தினம் பல்லாயிரம் கம்பளி போர்வைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கம்பளி மற்றும் படுக்கை விரிப்புகளுக்கும் சேர்த்துதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. அதிலும், கரீப் ரத், துரந்தோ போன்ற ரயில்களில் இதற்காகவே கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இந்த கம்பளி போர்வைகள், 121 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீராவி உருவாக்கும் பெரிய கொதிகலன்களில் 30 நிமிடங்களுக்கு உட்படுத்தப்பட்டு, முழுமையாக கிருமி நீக்கமும் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த பெட்ஷீட்டுகளில் கறை இருப்பதாகவும், சில சமயம் துர்நாற்றம் வருவதாக ரயில்வே ஊழியர்களே கூறியிருந்தது பெரும் விவாதத்தை சமீபத்தில் ஏற்படுத்தியிருந்தது.
அமைச்சர் உறுதி: இதையடுத்து, ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறையாவது நன்கு சலவை செய்யப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிதந்திருந்தார். அதேபோல, ஒரு மாதத்திற்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக 15 நாட்களுக்கு ஒருமுறை கம்பளிகள் துவைக்கப்படும் என்று வடக்கு ரயில்வேயும் பதிலளித்திருந்தது.
இந்நிலையில், சுகாதாரமான கம்பளி போர்வையை வழங்க தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் துணி உரையோடு கம்பளி வழங்கும் திட்டத்தை தொங்கியுள்ளது.
மதுரையில் ஆரம்பம்: பயணிகளுக்கு தூய்மையான, சுகாதாரமான கம்பளிப் போர்வை வழங்குவதற்கு தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் இப்படியொரு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கம்பளி போர்வைகள் தனித்தனி துணி உறைகளோடு நேற்று முன்தினம் முதல் சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த துணி உறைகள் கம்பளி போர்வை உள்ளிட்டப்பட்டு வெல்கிரோ ஒட்டும் முறைப்படி ஒட்டி வெளியே வராமல் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் கம்பளி போர்வையை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் உபயோகப்படுத்த முடியும்.
பயணிகள் மகிழ்ச்சி: இந்த புதிய வசதி மதுரை - சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கிறது. இதனால், பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகள் உச்சக்கட்ட சந்தோஷத்தில் உள்ளனர். இந்த புதிய வசதியை வரவேற்று ரயில்வேக்கு நன்றியும் தெரிவித்து வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications