வேரோடு சாய்ந்த மரம்.. மரத்தடியில் படித்து கொண்டிருந்த 17 மாணவர்கள் காயம்.. மதுரை அருகே பரபரப்பு
மதுரை: மதுரை அருகே மேலூரில் உள்ள அரசு பள்ளியில் மரத்தடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது மரம் வேரோடு சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், மாணவ - மாணவிகள் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. காலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதியம் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரசுப் பள்ளியிலும் அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. இதில் இன்று காலை 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர்.

9-ம் மாணவர்களுக்கு மதியம் தான் தேர்வு என்பதால், மரத்தடியில் அமர்ந்து தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில், மாணவ - மாணவிகள் பலர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மரத்திற்குள் சிக்கிய மாணவ மாணவிகளை உடனடியாக மீட்கப்பட்டனர். இதில் மாணவிகள் 12 பேர், மாணவர்கள் 5 பேர் என மொத்தம் 17 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து காயமடைந்த 17 பேரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மரத்தின் வேரானது உறுதித்தன்மையை இழந்ததால் சாய்ந்து விழுந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் 17 பேர் காயமடைந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications