Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படில்லாம் போலீஸ் பாதுகாப்பு தர முடியாதுங்க.. திருச்சி சூர்யாவுக்கு தமிழக அரசு தடாலடி பதில்

Subscribe to Oneindia Tamil

மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி திருச்சி சூர்யா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. பாஜகவில் பொறுப்பு வகித்து வந்த இவர், பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்குவதற்கு பெயர் போனவர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமாகவும் இருந்து வந்தார் திருச்சி சூர்யா. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சியின் விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் திருச்சி சூர்யா.

trichy suriya seeman high court

அதன் பிறகு பாஜகவினருக்கு எதிராகவும் மற்ற அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் குறித்தும் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியினருக்கு எதிராகவும் பேசி வருகிறார் திருச்சி சூர்யா. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நாதக கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோரால் தன் உயிருக்கு ஆபத்து என்றும், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி திருச்சி, சூர்யா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

திருச்சி சூர்யா தனது மனுவில், நான் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது அப்பா திருச்சி சிவா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். நான் தமிழக பாஜகவில் ஓ.பி.சி அணியில் மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்தேன். மேலும் சமூக ஊடகங்களில், தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் கலந்து கொண்டு வருகிறேன்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 15 ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தேன். இதனால் சீமான் என் மீது பழி வாங்கும் நோக்கோடு செயல்படுகிறார். மேலும் அதே கட்சியை சார்ந்த சாட்டை துரைமுருகன் என்பவரும் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர்கள் என் மீது தாக்குதல் நடத்தவும் திட்டம் தீட்டியுள்ளனர்.

மேலும் நான் குடியிருக்கும் வீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிலர் தாக்குதல் நடத்தினர். அது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி கடந்த மாதம் காவல்துறைக்கு மனு மூலம் விண்ணப்பித்திருந்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அதற்கு அரசு விதிக்கும் உரிய கட்டணத்தையும் செலுத்த தயாராக உள்ளேன். எனவே எங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 5 ஆம் தேதி நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கு குறித்த விவரங்கள் முழுமையாக தரவில்லை எனவே கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதனை எடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு அதாவது இன்றைய தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய சூழலில் சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை. அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை குறித்து டி.ஜி.பி, திருச்சி எஸ்.பி. தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி நிர்மல் குமார், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+