போன் பேசி யாரையாவது கொன்னேனா? எகிறிய டிடிஎப் வாசன்.. வா போகலாம்னு பிடித்து ஜீப்பில் ஏற்றிய போலீஸ்
மதுரை: என்ன பார்த்து எல்லோரும் கெட்டு போறாங்களா, தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை இருக்கே அதை பார்த்து யாரும் கெட்டு போக மாட்டாங்களா என மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த போது டிடிஎப் வாசன் கூச்சலிட்டவாறே வந்தார். அவரை ஜீப்பில் உள்ளே தள்ளி போலீஸார் அமர வைத்தனர்.
செல்போன் பேசிக் கொண்டே கார் ஓட்டிய விவகாரத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் நேற்று மதுரை திருமங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி பகுதிக்கு காரில் வந்த அவர், காரை அஜாக்கிரதையாகவும் கவனக் குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்விதமாக செல்போனில் பேசிக் கொண்டே ஓட்டியதை கேமராவில் பதிவு செய்து அவருடைய யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார்.
இதற்காக அவர் ஜாமீனில் வெளியே வர முடியாதபடியான ஒரு வழக்கு உள்பட 8 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டிய போது வாசன் கத்திக் கொண்டே வந்தார்.
அவர் கூறுகையில், எனக்கு ஒரே ஒரு கேள்வி , சட்டம் என்பது எல்லா மக்களுக்கும் பொதுவானதுதானே. வாங்க இந்த ரோட்டிலேயே நான் நிற்கிறேன், எத்தனை பேர் ஹெல்மெட் போடாமல் வருகிறார்கள் பாருங்கள், எத்தனை பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் பாருங்கள்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் drunk and drive case தான் போடுகிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் இத்தனை பிரிவுகளின் கீழ் வழக்கா, என்னை பார்த்துதான் எல்லாரும் கெட்டு போறாங்களா, வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கே, அதை பார்த்து யாரும் கெட்டு போகமாட்டாங்களா, நான் போனை காதில் வைத்தா பேசினேன், ஸ்பீக்கரில் போட்டுத்தானே பேசினேன். யாருடைய உயிருக்கு நான் பங்கம் விளைவிச்சேன், போர்ஷே காரை எடுத்துக் கொண்டு குடித்துவிட்டு இருவரை கொன்றவங்களுக்கு ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள்.
நான் நீதித் துறையை நம்பியிருக்கேன். எனக்காக நீதி கிடைக்கும். 23 வயது சின்ன பையன் எந்த ஒரு பேக்கிரவுண்ட்டும் இல்லாமல் வளர்ந்தால் இப்படித்தான் செய்வீங்களா? என் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள். இவ்வாறு டிடிஎப் வாசன் கொந்தளித்தார்.
இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனக்கு வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் படப்பிடிப்பு இருப்பதால் ஜாமீன் அளிக்குமாறு கோரியிருந்தார். மேலும் தான் காரை இயக்கியதால் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தனது வாதத்தில் கூறியிருந்தார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கு பைக் ஓட்ட கூடாது என எச்சரிக்கை விடுத்தும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காரை இயக்கியுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார் என அரசு தரப்பு வாதம் செய்துள்ளது. இதையடுத்து ஜாமீன் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறும் அதன் மீது மதியம் 2.40 மணிக்கு விசாரிப்பதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications