பாஜக மூலம் தான் பேசுவோம்.. மீண்டும் குட்டையை கிளப்பும் டிடிவி தினகரன்.. அதிர்ச்சியில் அதிமுக
மதுரை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக - அமமுக இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள டிடிவி தினகரன், அதிமுக தலைமையிலான கூட்டணியாக இருந்தாலும், பாஜக மூலம் தான் தொகுதி பங்கீடு செய்வோம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது [TTV Dhinakaran].
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில், "தேசிய ஜனநாயக கூட்டணியின் அம்மாவின் தொண்டர்கள் 99.9 சதவீதம் பேர் ஓரணியில் திரண்டுள்ளனர். தீயசக்தி திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். யாரோ ஒரு சிலர் ஒதுங்கியுள்ளனர் அல்லது விலகியுள்ளனர் சீப்பை ஒளித்து வைப்பதால் கல்யாணம் நின்று விடாது.

அதிமுக - அமமுக ஒற்றுமை
புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி ஆட்சியை எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் மீண்டும் கொண்டு வருவோம். இதற்காக உண்மையான அம்மாவின் தொண்டர்கள் எங்கள் பக்கம் வருவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். யாரோ சிலர் பேசுவதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். மக்கள் விரோத திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் 99.9 சதவீத அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டிருக்கிறோம்.
எங்கள் இலக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கிற செய்தியை சொல்லிவிடுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையடைந்து வருகிறது. எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம். சில பேர் அமமுக - அதிமுக கடந்த 9 வருடங்களாக பிரிந்துள்ளது, அவர்கள் எப்படி ஒன்றிணைவார்கள் என்று பேசினார்கள்.
தொகுதி உடன்பாடு
இன்றைக்கு அமமுக - அதிமுக கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் புரட்சி தலைவர் மற்றும் அம்மாவின் ஆட்சி அமைக்க முழு மனதோடு தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒன்றிணைந்துள்ளனர். பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு எங்களுக்கு தொகுதி உடன்பாடு முடியவில்லை என்றேன். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில், தேசிய அளவில் பாஜக தலைமை தாங்குகிற, தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் இணைந்துள்ளோம்.
அமமுக - அதிமுக இருவரும் அம்மாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாங்கள். கருத்து வேறுபாடுகளை கலைந்து ஓரணியில் இணைந்திருக்கிறோம். எங்கள் கட்சிக்கான தொகுதி உடன்பாட்டை பாஜக மூலம் அதிமுகவிடம் பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம். கூட்டணியில் தொகுதி உடன்பாடு, என்னென்ன தொகுதி என்பதுதான் மிகவும் சென்ஸிட்டிவானது.
பாஜக மூலம்
அதை சுமுகமாக முடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுகவிற்கு பாஜக மூலம் எங்களுக்கான தொகுதிகளை பெறுவோம் என்று கூறியிருந்தேன். எந்த ஒரு சின்ன பிரச்சனைக்கும் இடம் கொடுக்க கூடாது என்பதற்காக தான் தேர்தலில் போட்டியில்லை என்று கூறியிருந்தேன். அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே இலக்கு.
அதனால் யாருக்கும் சின்ன மன வருத்தம் வந்துவிடக்கூடாது என்று தான் தினகரன் நினைக்கிறேன். அமமுகவிற்கு தேவையான வேட்பாளர்களை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக மூலம் உடன்படிக்கை எட்டுவோம். பாஜக வழிநடத்துதலில் செயல்பட்டு அதிமுக கூட்டணியில் நாங்கள் இடங்களை பெற்று, எங்கள் வேட்பாளர்களாக போட்டியிடுவோர் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்" என்றார்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications