விஜய், நடிகை திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சு.. டிடிவி தினகரன் கொடுத்த ரியாக்ஷன்
மதுரை: விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, "தனிப்பட்ட விமர்சனங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும். நயினார் நாகேந்திரன் பொதுவாக பேசக்கூடியவர் அல்ல.. நான் அதை பார்க்கவில்லை. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்" என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து விட்ட பயம் இந்த அறிவிப்பில் தெரிகிறது. ஐயாயிரம் இல்லை ஐம்பதாயிரம் அறிவித்தாலும், ஒரு லட்சம் அறிவித்தாலும் இந்த ஆட்சிக்கு யாரும் வாக்களிக்க போவதில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கப் போகிறார்களா, இல்லையா என்னும் அளவிற்கு காங்கிரஸ் திமுகவுக்கான பனி போர் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை. வரும் தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று டிடிவி தினகரன் பேட்டியில் கூறினார்.

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், "அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியன் புதுமனை புகு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கிறோம்.
விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு:
தனிப்பட்ட விமர்சனங்களை யாரும் தவிர்க்க வேண்டும். நயினார் நாகேந்திரன் பொதுவாக பேசக்கூடியவர் அல்ல நான் அதை பார்க்கவில்லை. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்.
பெண்களுக்கு நேற்று 5 ஆயிரம் வழங்கியது குறித்த கேள்விக்கு:
5000 இல்லை 50000 அறிவித்தாலும் உறுதியாக இந்த முறை திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். மக்களை ஏமாற்றுகிற ஆட்சி முடிகிற தருவாயில் உள்ளது. விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், அனைத்து தரப்பு அரசு ஊழியர்கள், மேலும் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை நிறைய உருவாகி இருக்கிறது. போதைப்பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள்கள் பள்ளிகளில் கிடைக்கும் அளவிற்கு இந்த ஆட்சியில் சட்ட ஒழுங்கு போய் உள்ளது.இந்த ஆட்சியில் சிறு பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை வாங்கிவிடலாம் என்று இந்த திமுக ஆட்சியும் நினைக்கிறது அது முடியாது. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து விட்ட பயம் இந்த அறிவிப்பில் தெரிகிறது. ஐயாயிரம் இல்லை ஐம்பதாயிரம் அறிவித்தாலும், ஒரு லட்சம் அறிவித்தாலும் இந்த ஆட்சிக்கு யாரும் வாக்களிக்க போவதில்லை.
ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 11 ஆயிரம் கோடி நிதியை தேர்தல் நேரத்தில் தோல்வி பயத்திற்காக மகளிர்க்கு கொடுப்பதற்காக மடையும் மாற்றம் செய்திருப்பது உண்மையாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிதி அல்ல அரசு நிதி. கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் உள்ளது. பலமாக ஒன்றிணைந்து இருக்கிறது மேலும் புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவது குறித்த கேள்விக்கு:
அம்மா ஆட்சி அமைய ஓபிஎஸ் தான் முடிவு எடுக்க வேண்டும். அம்மா வழி வந்தவர்கள் அம்மா தொண்டர்கள் ஒன்றிணை வேண்டும் என்று அம்மா ஆட்சி அமைய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவ அளிப்பார்கள் அப்படி இல்லையென்றால் யாராக அவர்களின் முகத்திரை கிழிந்து விடும் யாராக இருந்தாலும்.
கடந்த 7,8 ஆண்டுகளாக அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிய வேண்டும், அம்மா ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என்று யாரெல்லாம் சொன்னார்களோ, பிரிந்து கிடந்த அம்மாவின் தொண்டர்கள் இன்று ஓர் அணியில் திரண்டு இருக்கிறோம். இன்னும் ஒரு சிலர் வெளியில் இருப்பவர்கள் தங்களுகு என்ன பலன் என்பதை பாராமல் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று அவர்கள் சொல்வது உண்மை என்றால் அதற்கு அவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அம்மாவின் தொண்டர்கள் அடையாளம் கண்டு ஒதுக்கி விடுவார்கள், தமிழக மக்கள் புறம் தள்ளி விடுவார்கள்.
மதுரை வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்த கேள்விக்கு:
இது போன்ற குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் அடிப்படை வசதி கூட இல்லை என்று அந்த மக்கள் சொல்கிறார்கள். ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மடை மாற்றம் செய்திருக்கிறார்கள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இது போன்ற குறைகள் சரி செய்யப்படும்.
கூட்டணி ஆட்சி என்று நான் வைத்த வெடிகுண்டு மற்ற கட்சிகளில் வெடிக்கிறது என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு:
தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்ணா திமுக தலைமையில் ஆட்சி அமையப்போகிறது என்பதுதான் எங்கள் கருத்து. திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்று தெரியாத அளவிற்கு ஒரு நிலவரம் தமிழகத்தில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்றிணைக்கும் போது பல விவாதங்களை நடத்தினார்கள்.
ஆனால் உண்மையிலேயே திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கப் போகிறார்களா, இல்லையா என்னும் அளவிற்கு காங்கிரஸ் திமுகவுக்கான பணி போர் நடைபெறுகிறது. அதற்கு யாரும் விவாதம் நடத்தவில்லை. நாங்கள் அம்மாவின் பிள்ளைகள் என்பதால் எங்கள் மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு அம்மாவின் ஆட்சி அமைந்து, அம்மாவின் கொள்கைகள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காக இணைந்துள்ளோம். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள இடர்பாடுகள் பற்றி யாரும் பேசவில்லை.
சசிகலா குறித்து ராஜ கண்ணப்பன் கூறிய கேள்விக்கு:
அது குறித்து அவர்தான் பேச வேண்டும்.தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு: சுமுகமான முறையில் எல்லா கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு கௌரவமான விதத்தில் வழங்கப்படும். குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கு, போதை அரக்கர்கள் கஞ்சா போதையில் இருந்து தமிழகத்தை மீட்க ஒன்றிணைந்திருக்கிறோம் உறுதியாக வெற்றி பெறுவோம்.
ஆட்சியில் பங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கேட்குமா என்ற கேள்விக்கு:
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நாங்கள் கண்டிசன் போடவில்லை எங்களை சேர்ந்தவர்கள் அமைச்சராக வேண்டும் என்பது எனது விருப்பம் தான் என்று சொன்னேன் ஆசை என்று சொன்னேனே தவிர நோ கண்டிஷன்ஸ்.
அதிமுக மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதியில் முதல்வர் மருமகன் சபரீசன் இறங்கி வேலை பார்ப்பதாக வந்த தகவல் குறித்த கேள்விக்கு: சபரீசன் அல்ல மாரிசனே வந்தாலும் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்த கேள்விக்கு:
தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை. வரும் தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என கூறினார்.
-
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
அங்கேயும் இருக்கு! இங்கேயும் இருக்கே! சீமான் பேச்சை விஜய் காப்பி? ஆதாரத்துடன் வந்த நாதக தம்பிகள்! -
மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் உதவி கேட்ட சங்கீதா.. விஜய் ஆடும் ஆட்டம்! முதலமைச்சர் போட்ட உத்தரவு! -
கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டை டெல்லி ஜெயிக்காது! CSK-ஐ குறிப்பிட்டுப் பேசிய விஜய்! அதிர்ந்த அரங்கம் -
Juli: தமிழ்நாடு திராவிட கோட்டை.. திரை தளபதியால் ஒன்னும் பண்ண முடியாது..! ஜூலி ஆவேசம் -
என் பாப்பாவைவிட எனக்கு விஜய்தான் பிடிக்கும்.. கைக்குழந்தையுடன் தஞ்சை வந்த பெண் சிலாகிப்பு! -
Vijay: விஜயால் பிரபல நடிகர் வீட்டுக்குள்ளேயே பஞ்சாயத்து.. சோசியல் மீடியாவில் வெடித்த வாக்குவாதம்! -
உங்க வரலாற்றை நோண்டுனா என்ன ஆகும் தெரியுமா? கிட்னி திருட்டு.. விஜய்க்காக ஜூலியை அட்டாக் செய்த நடிகர் -
விஜய் வீட்டில் இப்போ நடக்கும் குடும்ப பிரச்சனை.. 35 வருடத்திற்கு முன்பே SAC மகன் படத்தில் காட்டி விட்டாரே! கலாய் சீன் -
TVK Vijay: கருணாநிதியாலே முடியவில்லை.. திமுக தொடர்ந்து 2வது முறை ஆட்சி பிடித்த சரித்திரம் இல்லை.. விஜய் பேச்சு -
தவெக கூட்டத்தில் கலந்துகொள்ள போலி QR Code அட்டையுடன் வந்த விஜய் ரசிகர் - எச்சரித்து அனுப்பிய போலீஸ்!












Click it and Unblock the Notifications