Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஜித் குமார் லாக் அப் மரணம்.. குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொன்ன தவெக தலைவர் விஜய்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: காவலர்களின் தாக்குதலால் உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்று அவரின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். திருட்டு வழக்கு விசாரணையின் போது காவல்துறையினரின் கொடூரத் தாக்குதலால் அஜித் குமார் உயிரிழந்தார். இவர்களது குடும்பத்தினருக்கு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக நேரில் சென்று ஆறுதல் கூறி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது அஜித் குமாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோவியில் காவலாளியாக இருந்தவர் அஜித் குமார். இவர் திருட்டு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்டு, விசாரணை என்ற பெயரில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

TVK Chief Vijay Consoles Ajith kumar s Family After Custodial Death in Madapuram

அஜித் குமார் மரணம்

கடந்த 4 ஆண்டுகளில் நடக்கும் 24வது லாக் அப் டெத் இதுவாகும். இதனால் அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் கண்டனம் தெரிவித்தன. அதற்கேற்ப உடனடியாக தமிழக அரசு காவலர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அதேபோல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, நிச்சயமாக நீதி கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளது.

அரசியல் கட்சிகள் ஆறுதல்

அஜித் குமாரின் உயிரிழப்பால் அந்த குடும்பத்தினர் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசு சார்பாக அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித் குமாரின் சகோதரருக்கு அரசு வேலை அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக, விசிக

அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இருந்தார். விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் நிச்சயம் நீதிக்காக கடைசி வரை துணை நிற்கும் என்று நேரில் சென்று தெரிவித்தனர்.

நேரில் வந்த விஜய்

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அஜித் குமாரின் தாய், சகோதரர் நவீன் ஆகியோரின் கைகளை பிடித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அஜித் குமாரின் மரணத்திற்கு விஜய் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தவெக சார்பாக ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அஜித் குமார் வீட்டிற்கு சென்று அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

ரூ.2 லட்சம் நிவாரண உதவி

அப்போது தவெக சார்பாக ரூ.2 லட்சம் நிவாரண உதவியும் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறி இருப்பது அக்கட்சி நிர்வாகிகள் இடையே ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஏனென்றால் தவெக நிர்வாகிகளுக்கு கூட கூறாமல், விஜய் அமைதியாக வந்து ஆறுதல் கூறி சென்றுள்ளார். அஜித் குமார் வீட்டின் 10 நிமிடங்கள் வரை இருந்த விஜய், மீண்டும் சிறிய காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+