விஜய் பேச்சை கூட கேட்கல.. ரேம்ப் வாக் முடிந்த கையோடு மொத்தமாக கிளம்பிய தவெக தொண்டர்கள்.. என்ன காரணம்
மதுரை: தவெக 2வது மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர். இதற்கிடையே மாநாடு தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே விஜய் ரேம்ப் வாக் செய்தார். அதீத வெயலில் காத்திருந்த தொண்டர்கள் விஜய் வாக் முடிந்த உடனேயே கலைந்து செல்ல ஆரம்பித்துள்ளனர். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொண்டர்கள் வெளியேற ஆரம்பித்தனர்.
விஜய்யின் தவெகவின் 2வது மாநாடு இன்று நடைபெற்றது. மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மாநாட்டைச் சிறப்பாக நடத்த கடந்த சில வாரங்களாகவே விறுவிறு ஏற்பாடுகள் நடந்தன. இதற்கிடையே இன்று மாலை தொடங்கும் மாநாட்டிற்குக் காலை முதலே தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர்.

அதீத வெப்பம்
இருப்பினும், 10 மணிக்கு மேல் வெயில் அதிகரித்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவான நிலையில், மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக சிலர் குழந்தைகளுடன் மாநாட்டிற்கு வந்த நிலையில், வெயில் தாங்க முடியாமல் குழந்தைகள் கதறி அழுதன. இதையடுத்து குழந்தைகளுடன் வந்தவர்கள் வெளியேறி நிழலான பகுதிக்கு சென்றனர். பலரும் கீழே விரிக்கப்பட்ட பச்சை மேட்டை எடுத்து தற்காலிக மேற்கூரை போல பயன்படுத்தினர்.
விஜய் மாநாடு
கூட்டம் அதிகரித்தாலும் வெப்பம் அதிகமாக இருந்ததாலும் தவெக மாநாடு முன்கூட்டியே ஆரம்பித்தது. பிற்பகல் 3.30க்கு மேல் மாநாட்டுத் திடலுக்கு விஜய் வருகை தந்தார். விஜய் மேடையில் பெற்றோரும் இந்த நிலையில், அவர்களை வணங்கிவிட்டு மேடைக்கு ஏறினார். அப்போது கூட்டம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக விஜய் ரேம்ப் வாக் செய்ய போடப்பட்டிருந்த மேடைக்கு அருகே கூட்டம் ஓவராக இருந்தது.
அங்கு வந்த விஜய் வழக்கம் போல அதில் நடந்து சென்றார். . கூடிய இருந்த தொண்டர்கள் மத்தியில் கை அசைத்து கொண்டே சென்றார். ரேம்ப் வாக் மேடையில் யாரும் ஏறக்கூடாது என தடுப்புகள் போடப்பட்டு இருந்தது. அந்த தடுப்புகளை யாரும் தாண்டக்கூடாது என்பதால் அதில் க்ரீஸ் கூட தடவியிருந்தனர். ஆனாலும், அதையும் தாண்டி பல தொண்டர்கள் மேலே ஏறி விஜய்யை பார்க்க முண்டியடித்தனர். அவர்களை விஜய் உடன் இருந்த பவுன்ஸர்கள் கட்டுப்படுத்தினர்.
கலைந்து சென்ற தொண்டர்கள்
இருப்பினும், ரேம்ப் வாங் முடிந்த முடிந்த உடனேயே தொண்டர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்தனப். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொண்டர்கள் வெளியேற ஆரம்பித்தனர். விஜய் வாக் முடிந்தவுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை பார்க்க முடிந்தது. ஒரு பக்கம் தொண்டர்கள் வந்தாலும் கூட இன்னொரு பக்கம் தொண்டர்கள் கிளம்ப ஆரம்பித்தனர். விஜய் பேச்சை கூட கேட்காமல் தொண்டர்கள் கிளம்புவது அங்கு எந்தளவுக்கு வெயில் மோசமாக இருக்கிறது என்பதையே காட்டுவதாக இருக்கிறது.
உடல்நலக்குறைவு
அதீத வெயில் காரணமாக இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் உடநலக்குறைவு ஏற்பட்டிருந்தது. பலருக்கும் மாநாட்டு திடலிலேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிலருக்கு முதலுதவி மட்டும் போதுமானதாக இல்லை. இதையடுத்து சுமார் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்தளவுக்கு இன்று மதுரையில் வெப்பம் மிக மோசமாகவே இருந்தது.












Click it and Unblock the Notifications