குளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி!
Recommended Video
மதுரை: குளிக்க போன திவ்யாவை.. கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்களால் உசிலம்பட்டி நடுங்கி கிடக்கிறது.
மதுரை உசிலம்பட்டி உள்ள ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறாள் திவ்யா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 16 வயது சிறுமி.. சேடப்பட்டியில் பாட்டி வீடு உள்ளது.
அந்த ஊரில் திருவிழா என்பதால், திவ்யா குடும்பத்துடன் சென்றிருக்கிறார். திருவிழா முடிந்ததும், குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பிவிட திவ்யா மட்டும் அங்கேயே பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று காலை அங்குள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற திவ்யாவை காணவில்லை. நீண்டநேரமாக திரும்பாததால், அவரை தேடி உறவினர்கள் சென்றனர். பல இடங்களில் தேடினர். அப்போதுதான், மலைப்பகுதியில் கல்லால் தலை நசுக்கப்பட்டு மாணவி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.
இதை கண்டு அலறிய குடும்பத்தினர், உடனடியாக சேடப்பட்டி போலீசாருக்கு தகவல் சொல்லவும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் இந்த மிக மிக பயங்கரமாக நடந்துள்ளதை கண்டு அதிர்ந்தனர். சராசரி மனிதன் செய்திருக்கக்கூடிய கொலை இல்லை அது.. கொடூர மனம் படைத்தவர்கள் யார்என்பதை கண்டறிந்து அதன்படியே அவர்களை பிடித்தும் விட்டனர் போலீசார்.
அந்த கிராமத்தை சேர்ந்த மது, மாதவன் ஆகிய 2 பேர்தான் அந்த கொலையாளிகள் என்பதை உறுதியானது. இரண்டு பேருமே இரட்டையர்கள். இவர்களுக்கு ஒரு வினோத பழக்கம் உள்ளது. சண்டை ஆனாலும் சரி, சந்தோஷம் ஆனாலும் சரி, எதை செய்தாலும் ஒன்றாகத்தான் செய்வார்களாம். அப்படி செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்குமாம்.. அதிலும் பெரும்பாலும் குரூரதன்மையாகவே இருந்திருக்கிறது. அப்படித்தான் திவ்யாவின் சம்பவமும் நடந்துள்ளது.
மாதவனின் வீட்டுக்கு திவ்யா தண்ணீர் பிடிக்க அடிக்கடி போவாராம். அப்போதுதான் மாதவன் திவ்யாவை பார்த்துள்ளான். ஒருதலைக்காதல் வந்துள்ளது.. இதற்கு திவ்யா மறுத்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த சமயத்தில்தான் குளிப்பதற்காக திவ்யா சென்று கொண்டிருந்தபோது, அந்த ரோட்டில் யாருமே இல்லை. இதைதான் மாதவன் கவனித்துள்ளார்.
திவ்யா பின்னாடியே அவர் முதலில் போக, பின்னாடியே மதுவும் சென்றுள்ளான். இறுதியில் இருவருமாக சேர்ந்து திவ்யாவை மாறி மாறி நாசம் செய்துள்ளனர். இதில் திவ்யா மூச்சடைத்து இறந்தேவிட்டார். உயிர் பிரிந்துவிட்டது என்று தெரிந்தும், இருவரும் சேர்ந்து திவ்யாவின் கழுத்தை நெரித்துள்ளனர். பிறகு ஒரு பெரிய கல்லை தூக்கி கொண்டு வந்து திவ்யா முகத்தில் போட்டு, முகத்தை சிதைத்துள்ளனர். அதன்பிறகு, திவ்யாவை இழுத்துகொண்டு போய் புதர் நிறைந்த ஒரு பாறையின் இடுக்கில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த கொடூர இரட்டையர்களின் செயல்கள், நடவடிக்கைகளை, குணாதிசயங்களை கண்டால், இவர்களுக்கு மேலும் பல குற்ற செயல்களில் தொடர்பு கண்டிப்பாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மாணவியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications