உப்புமா, கிச்சடி, பொங்கல்.. அரசு பள்ளிகளில் அசத்தலான காலை சிற்றுண்டி..எத்தனை வகைகள் தெரியுமா?
மதுரை:உப்புமா, பொங்கல், கிச்சடி, சேமியா வகைகள் என தினம் ஒரு வகை ருசியான உணவுடன் தமிழக அரசுப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டிகளில் எந்த நாட்களில் என்ன மாதிரியான உணவுகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும்; 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்படும். முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இதை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்றைய தினம் முதல்வர் மு.க ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை மதுரையில் தொடக்கி வைத்து மாணவர்களுக்கு ஊட்டி விட்டு சாப்பிட்டார்.

சுவையான காலை டிபன் என்னென்ன
ரவா உப்புமா, காய்கறி சாம்பார், சேமியா உப்புமா காய்கறி சாம்பார்,கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், சேமியா காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி,சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி, ரவா பொங்கல் காய்கறி சாம்பார், அரிசி உப்புமா காய்கறி சாம்பார். காலை உணவு வகைகள் :
பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும். திங்கட்கிழமையில் உப்புமா வகை. ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது சேமியா உப்புமா உடன் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உடன் உப்புமா காய்கறி சாம்பார். செவ்வாய்க்கிழமையில் கிச்சடி வகை. ரவா கிச்சடி சேமியா காய்கறி கிச்சடி அல்லது சோள காய்கறி கிச்சடி அல்லது கோதுமை ரவா காய்கறி கிச்சடி

பொங்கல் சாம்பார்
புதன்கிழமை பொங்கல் வகை, ரவா பொங்கல் உடன் காய்கறி சாம்பார் அல்லது வெண் பொங்கல் உடன் காய்கறி சாம்பார். வியாழக்கிழமையில் சேமியா வகை: சேமியா உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார் கொடுக்க வேண்டும்.

சிறுதானியங்கள்
வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் செவ்வாய்க்கிழமை உணவு வகையின்படி ரவா கேசரி சேமியா கேசரி வழங்கப்படும். ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / ரவை/கோதுமை ரவை / சேமியா / உள்ளூரில் / அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் / மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் சமைத்த பின் 150 - 200 கிராம் உணவு மற்றும் 60 மி.கி காய்கறியுடன் கூடிய சாம்பார்.

தரமான மூலப்பொருட்களில் உணவு
ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது போன்ற அறிவுரைகளையும் அரசு வழங்கியுள்ளது.

பசிப்பிணி மருத்துவர்
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் வசெயல்படுத்தப்பட உள்ளது. 'பசிப்பிணி மருத்துவர்' என்ற புறநானுற்றுப் பாடலை மேற்கோள்கட்டி காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்!












Click it and Unblock the Notifications