பொங்கி வரும் வைகை! இரு கரைகளும் அணைத்து ஆர்ப்பரிக்கும் வெள்ளம்! மதுரை மக்களே அலர்ட்டா இருக்கனும்!
மதுரை: கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் வைகை அணை 70 அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வைகை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது.
வைகை அணையில் தேக்கப்படும் நீரானது, தேனி திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
இந்நிலையில், தொடர் மழையால் வராகநதியில் இருந்தும், சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் மற்றும் வைகை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக, இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனையடுத்து, ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.

15 ஆயிரம் கன அடி நீர்
கனமழை காரணமாக வைகை அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்றி வந்த நிலையில், வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து, தற்போது வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வைகை ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் வர உள்ளது. வைகை கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துடனும், பாதுகாப்பாகவும் இருந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்குவதை முற்றிலும் தவிர்த்திடவும், ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றில் இறங்காமல் பாதுகாத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications