வைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு
மதுரை: ஈழத் தமிழர் பிரச்சினையில் ப.சிதம்பரம் என்ன செய்தார்? உள்துறை, நீதித்துறையில் பதவி வகித்தும் ப.சிதம்பரம் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. வைகோ காலை பிடித்து கேட்டுக்கொள்கிறேன், வைகோ நாடாளுமன்றத்தில் முதலில் பேசும் போது ஈழத் தமிழர் துரோகிகள் குறித்து பேச வேண்டும் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியதாவது: பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. உறுப்பினர்கள் சேர்க்கை விரைவாக நடைபெறுகிறது. விண்வெளி ஆராய்ச்சி துறையின் வெற்றியாக சந்திராயன் 2 செயற்கோள் வெற்றிகரமாக அனுப்பட உள்ளது.
நாடு முழுதும் நதிநீர் பிரச்னைகள் உள்ளது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.

வெள்ளை அறிக்கை
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் 1500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் ஒரு மாணவர் கூட சேராமல் மூடப்படும் நிலைக்கு உள்ளன. 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி சென்று உள்ளனர். தமிழக அரசு பள்ளிகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிடும் பொழுது பல பேரின் தோல் உரிக்கப்படும் என்றும் கூறினார்.

இரட்டை வேடம்
தமிழகத்தில் மொழி கொள்கை என்பது ஒன்றும் இல்லை. வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பிற மொழிகள் கற்று கொடுக்கப்படுகிறது. இந்தாண்டு முதல் இந்தி சொல்லி கொடுக்கும் பள்ளிகளை மூட முடியுமா? என்று கேள்வி எழுப்பிய பொன்.ராதாகிருஷ்ணன், மும்மொழி கொள்கையில் இரட்டை வேடம் போடப்படுகிறது என்றார்.

துரோகிகள் குறித்து பேச வேண்டும்
இலங்கை தமிழர் பிரச்சினையில் ப.சிதம்பரம் என்ன செய்தார்? உள்துறை, நீதித்துறையில் பதவி வகித்தும் ப.சிதம்பரம் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. வைகோ காலை பிடித்து கேட்டுக்கொள்கிறேன், வைகோ நாடாளுமன்றத்தில் முதலில் பேசும் போது இலங்கை தமிழர் துரோகிகள் குறித்து பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆங்கிலத்தில் தேர்வு
தபால்த் துறையில் கடந்த முறை நடத்திய தேர்வில் தமிழில் நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடந்து உள்ளன. கடிதம் போக்குவரத்துக்கு ஏதுவாகவே ஆங்கிலத்தில் தேர்வு நடைபெறுகிறது. தபால்த் துறை தமிழில் தேர்வு எழுதலாம் என பாஜக தான் கொண்டு வந்தது என்றும் பேசினார்.

இந்தி மயம்
இந்தியா முழுதும் இந்தி மயமானலும் தமிழகத்தில் தமிழ் மட்டுமே என இருக்கிறது. பிழைப்புக்காக, அரசியல் லாபத்திற்க்காக தமிழை முன் நிறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல வர இருக்கிறது, இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications