விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோஷம் .. பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரை: கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். இன்று அதிகாலை 5.51 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான இந்த நிகழ்வை காண பல லட்சம் பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுவார். இதுதான் மதுரையில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரைத்திருவிழாவின் முக்கியமான நாளாகும். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மதுரையில் திருவிழாவைக் காண குவிவார்கள். கொரோனா காலத்திற்கு பின், இந்த ஆண்டு தான் மிக மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

எங்கும் அன்னதானங்கள் வழங்கப்படுகிறது. மொத்த மதுரையும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. எங்கு கண்டாலும் தண்ணீர் பந்தலும், நீர் மோர் பந்தலும், அன்னதானக்கூடங்களும் நிரம்பி காணப்படுகின்றன. மக்கள் புத்தாடை உடுத்தி, விண்ணை பிளக்க கோவிந்தா கோஷம் எழுப்பி கள்ளழகரை வரவேற்று வருகிறார்கள்.

வைகை ஆற்றங்கரை ஓரத்திலேயே குதிரை வாகனத்தில் வண்டியூருக்கு கள்ளழகர் செல்கிறார். மே 6ஆம் தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார். மே 6ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அழகர் மதுரைக்கு வந்த நோக்கம் நிறைவேறியதும் அன்றைய தினம் நள்ளிரவு இராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மே 7ஆம் தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் அழகர். அன்று பிற்பகல் 2 மணிக்கு கள்ளழகர் இராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லாக்கில் புறப்படுவார். இராமநாதபுரம் மன்னர் சேதபதி மண்டபத்தில் தங்கும் கள்ளழகர் மே 8ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர்கோயில் நோக்கி புறப்படுகிறார். அப்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை நேரத்திலும் வந்து வழியனுப்பி வைப்பார்கள். மே 9ம் தேதி காலையில் கள்ளழகர் அழகர் கோயிலுக்கு வந்தடைகிறார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications