மதுரையில் வரிச்சியூர் செல்வத்தை சந்தித்த டிடிஎப் வாசன்! நெட்டிசன்கள் விமர்சனம்!
மதுரை: மதுரையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை யூடியூபர் டிடிஎப் வாசன் சந்தித்து பேசியது பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் வரிச்சியூர் செல்வம். இவர் ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தார்.

அத்துடன் கூடவே நடமாடும் நகைக் கடை போல் நிறைய நகைகளை அணிந்து வருகிறார். இதுவே இவரது அடையாளமாக மாறி போனது. ஒரு கட்டத்தில் அவரை என்கவுன்ட்டரில் சுடவும் போலீஸார் உத்தரவு பிறப்பிக்கும் நிலை ஏற்பட்டது.
அதன் பிறகு அவர் கடுமையாக எச்சரித்து, அடக்கி வைக்கப்பட்டார். அவர் திருந்தி வாழ விரும்புவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து அவர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். சிறு வயதில் இருந்தே நகை போட்டு பழகிவிட்டதால் அப்படியே இருக்கவே தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இவரிடம் 204 பவுன் நகை இருப்பதாக தெரிவித்துள்ளார். காலையில் வாக்கிங் போய்விட்டு உடற்பயிற்சி செய்வாராம்,. பிறகு குளித்துவிட்டு சாப்பிட்டு ஏதாவது சினிமாவிற்கு சென்று விடுவாராம். இப்போது நான் ரவுடி இல்லை என்றும் மக்கள் தன்னை விஐபியாகவே பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதெல்லாம் நகைகளே இல்லாமல் இருந்தார். பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் அவர் வெளியே வந்துவிட்டார்.
இந்த நிலையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன், செல்போனில் பேசிக் கொண்டே கார் ஓட்டியதாக மதுரை திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பிறகு தனக்கு ஷூட்டிங் இருப்பதால் தன்னை ஜாமீனில் விடுவிக்க மனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் தினமும் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும். இதற்காக அவர் நேற்றைய தினம் கையெழுத்திட வந்தார். அப்போது அவர் கையெழுத்திட்டுவிட்டு மதுரையில் வரிச்சியூர் செல்வத்தை சந்தித்து பேசினார்.
அவர் வீட்டில் தேங்காய் எண்ணெயில் செய்யப்பட்ட ஒரு பலகாரத்தை சாப்பிட்டார். அப்போது வாழ்க்கையில் மறக்க முடியாத வெற்றி எது என வாசன் கேட்ட போது செல்வம், "உங்களை போல் எல்லார்கிட்டயும் பழகினதுதான்" என்றார். மேலும் நான் ஒரு ஐயப்ப பக்தர், 36 ஆண்டுகள் நான் சபரிமலைக்கு சென்றிருக்கிறேன் என தெரிவித்திருந்தார். இவர்கள் இருவரும் சந்தித்தது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications