ஆத்தா போயிட்டு வாத்தா!.. என் சாமி! ரூ 2000 நோட்டுகளை உச்சி முகர்ந்த வரிச்சியூர் செல்வம்!
மதுரை: கடைசியா ஒரு முறை உன்னை முகர்ந்து பார்த்துக்கறேன் என வரிச்சியூர் செல்வம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்த ரூ 2000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாளை முதல் வங்கிகளில் தினமும் ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள ரூ. 2000 நோட்டுகளை கொடுத்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு ரூ 2000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் ரூ 2000 நோட்டுகளை மாற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்காக ரூ 2000 நோட்டை அச்சடிக்க வேண்டும், எதற்காக அதை திரும்ப பெற வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகா தேர்தல் தோல்விக்காக மத்திய அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இந்த ரூ 2000 நோட்டை வைத்து வரிச்சியூர் செல்வம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் ரூ 2000 தாளா போகுது. ஒரு வாட்டி முகர்ந்துகிறேன். இந்த 2000 ரூபாய் தாளை இனி எப்போ பார்க்க போறேனோ? தலைவா திருப்பியும் ரூ 2000 தாள் போட்டீங்கன்னா சொல்லிட்டு செய்ங்க. இருக்குற 2000 ரூபாய் தாள் பூரா இப்படி வெட்டியா போகுது. ஓகே மகிழ்ச்சி, விடை கொடுக்கறேன் உனக்கு. போயிட்டுவாத்தா! எங்களை காக்கும் தெய்வம் நீ! எங்களை விட்டு போற! என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
மதுரையை சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். இவர் மீது நிறைய அடிதடி வழக்குகள் உள்ளன. அவற்றை எல்லாம் தற்போது முடித்து வருவதாக அவர் ஏற்கெனவே கூறியுள்ளார். நடமாடும் நகைக் கடை என அழைக்கப்படுகிறார். இவரது கழுத்தில் பெரிய சங்கிலி போல் தங்கச் சங்கிலி போட்டிருக்கிறார். கை விரல்களில் அனைத்திலும் மோதிரம் அணிந்திருக்கிறார்.
வரிச்சியூர் செல்வம் தன்னை ரவுடி என அழைக்க வேண்டாம் என்றும் ஜோக்கர் என சொன்னாலும் கவலையில்லை, ஆனால் ரவுடி வேண்டாம் என கோரி்கை விடுத்திருந்தார். அது போல் தனது சிறை வாழ்க்கை குறித்தும் அவர் பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த சிறை வாழ்க்கை என் எதிரிக்குக் கூட வரக் கூடாது என்றார். அது போல் அண்மையில் காயத்ரி ரகுராமை வரிச்சியூர் செல்வம்சந்தித்த புகைப்படத்தை திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
இது குறித்து வரிச்சியூர் செல்வம் பேசுகையில் உடனே திருச்சி சூர்யாவுக்கு நான் போன் போட்டு என்னப்பா இப்படிலாம் போடலாமா, அவங்க யாருன்னே தெரியாது, ஓட்டலுக்கு சாப்பிட வந்த போது நான் வித்தியாசமாக இருப்பதால் என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இது ஒரு குற்றமா, இப்படியெல்லாம் போடலாமா என கேட்டேன். உடனே அவரும் அண்ணே சாரிண்ணே என தெரிவித்தார். காயத்ரி ரகுராமை என் வாழ்க்கையில் அன்றுதான் பார்த்தேன். அதுவரை அவர் யாரென்றே எனக்கு தெரியாது என கூறியிருந்தார்.
இதை திருச்சி சூர்யா சிவா மறுத்துள்ளார். அவர் கூறுகையில் எனது ட்விட்டரில் வரிச்சியூர் செல்வமும் காயத்ரி ரகுராமும் இரவு நேரத்தில் ஒரு தோப்பில் சந்தித்ததாக நான் போட்டிருந்தேன். இது தொடர்பாக எந்த செய்தியாளரும் வரிச்சியூர் செல்வத்திடம் கேட்கவில்லை. அவராகவே சூர்யா சிவா தன்னிடம் பேசி மன்னிப்பு கேட்டுவிட்டு அந்த புகைப்படத்தை எடுத்து விட்டார் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக வரிச்சியூர் செல்வத்திடம் நான் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வந்தன. அந்த பேட்டியை நான் பார்க்கவில்லை, ஆனால் பேட்டி கொடுத்த இரு நாட்களுக்கு பிறகு அவர் எனக்கு ஒரு வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில் செய்தியாளர் சந்திப்பில் "நீங்கள்(சூர்யா சிவா) மன்னிப்பு கேட்டதாக தெரியாமல் கூறிவிட்டேன், மன்னிப்பு விடுங்கள்" என கூறியிருந்தார். எனவே நான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என கூறி அந்த ஆடியோவையும் திருச்சி சூர்யா வெளியிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications