"ஆபத்து ஆபத்து".. 24 மணி நேரத்தில் திருமாவளவன் மீது கேஸ்.. பதவி பறிக்க மூவ்! படபடக்கும் பாஜக ராமசாமி
திருமாவளவன் மீது பாஜக ராமசாமி சுப்ரீம்கோர்ட்டில் புகார் செய்துள்ளார்
மதுரை: இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளை மீறி, சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணம், திருமாவளவன் பேசிவருவதால், அவரது பதவியை சபாநாயகர் பறிக்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதியும் மத்திய அரசின் சட்ட நிலைக்குழு உறுப்பினரான ராமசாமி தெரிவித்துள்ளது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபகாலமாகவே திருமாவளவனின் அரசியல் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.. ஆளும் திமுக கூட்டணியில் இருப்பது விசிகவுக்கு பலம் என்றாலும், தன்னுடைய தனித்துவத்தை அக்கட்சி என்றுமே இழந்ததில்லை.
தமிழக தேர்தலில்களில் வாக்கு சதவீதத்தை தீர்மானிக்கக்கூடிய அளவுக்கு விசிக களமாடி வருவதை மறுக்க முடியாது.. அதிலும், இந்துத்துவா, மதவாத சக்திகளுக்கு எதிராக திருமாவளவனின் அரசியல், எதிர்க்கட்சிகளை எரிச்சலூட்டி கொண்டிருக்கிறது..

திருமா + அலர்ட்
கூட்டணி அரசியல் என்பதையும் தாண்டி, பாஜகவிடம் கவனமாக இருக்கும்படி, அதிமுகவையும் அடிக்கடி அலர்ட் செய்து வருகிறார் திருமாவளவன்.. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சனாதனமா? சனநாயகமா? என்கிற கோட்பாட்டை முன்வைத்துதான் மாநாடு, பொதுக்கூட்டங்களை நடத்தி திமுக கூட்டணியை பலப்படுத்தினார் திருமாவளவன்.. மேலும் தானே முன்னின்று, ஓடிஓடிச்சென்று ஒவ்வொரு கட்சியாக பேசி ஆதரவையும் திரட்டினார்.. பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மதவாதிகளின் பேச்சுக்கள், போன்றவற்றுக்கு, சரியான பதிலடிகளை தந்து வருவது திருமாவளவன் என்பதால், அவரது முயற்சி ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கு பெரும் நிம்மதியை தந்து வருவதை மறுக்க முடியாது..

பறந்த புகார்
அதனால்தான், எச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், விசிகவை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசமாக முழங்கி வருகிறார்கள்.. விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. எப்படியும் திமுக கூட்டணியில் இணைந்தே விசிக இந்த முறையும் தேர்தலை சந்திக்கும் என்றே தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில், விசிகவை தடை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடமே கடந்த மாதம் ஒரு கடிதம் பறந்தது.. விசிகவின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனா மாநில தலைவர் திருமுருக தினேஷ், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

திருமாவளவன்
இந்நிலையில், திருமாவளவன் குறித்து பாஜக மேலும் விமரசித்துள்ளது.. பாஜக சட்ட நிலைக்குழு உறுப்பினர் டாக்டர் ராமசாமி, மதுரையில் செய்தியாளர்களிடம் சொன்னதாவது: ஆர்.எஸ்.எஸ் அமைப்பை "தீவிரவாத அமைப்பு" என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட ஒரு எம்பி தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி பேசி வருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்து, கடந்த மாதம் 6ம் தேதி பாஜக சார்பில் புகார் தந்தோம்.. ஆனால், தமிழக போலீஸ் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தை அணுகியபிறகு, தமிழ்நாடு காவல்துறை நோட்டீஸ் அனுப்பிய பிறகு, இன்றைக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்றது...

ஷா யார்
அதில் திருமாவளவன் பேசியது மற்றும் மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் தொடர்பாக கோர்ட்டில் வழங்கப்பட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு அவர் மீது 24 மணி நேரத்தில் வழக்குப் பதிவு செய்வதாக உறுதியளித்துள்ளனர்... திருமாவளவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த பிறகு, உடனடியாக மக்களவை சபாநாயகரை சந்தித்து, அவரது எம்பி சட்டப்படி நீக்கம் செய்ய முயற்சி செய்வேன். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்தவர்கள் தான்.. அப்படின்னா, அவர்கள் எல்லாரும் தீவிரவாதிகளா?

திருமாவளவன்
இந்நிலையில், திருமாவளவன் குறித்து பாஜக மேலும் விமரசித்துள்ளது.. பாஜக சட்ட நிலைக்குழு உறுப்பினர் டாக்டர் ராமசாமி, மதுரையில் செய்தியாளர்களிடம் சொன்னதாவது: ஆர்.எஸ்.எஸ் அமைப்பை "தீவிரவாத அமைப்பு" என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்ட ஒரு எம்பி தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி பேசி வருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்து, கடந்த மாதம் 6ம் தேதி பாஜக சார்பில் புகார் தந்தோம்.. ஆனால், தமிழக போலீஸ் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தை அணுகியபிறகு, தமிழ்நாடு காவல்துறை நோட்டீஸ் அனுப்பிய பிறகு, இன்றைக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்றது...
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம்












Click it and Unblock the Notifications