அரை நிர்வாணம்.. உல்லாசமாக மது குடித்துவிட்டு.. மதுரை காவல் உதவி ஆணையர் செய்யும் வேலையை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

மதுரை: அரை நிர்வாணத்துடன் உல்லாசமாக மதுகுடிக்கும் ஆயுதப்படை காவல் உதவி ஆணையர், போதையை ரசிப்பதற்காக காவலர் ஒருவரை அழைத்து புல்லாங்குழலை ஊத வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

Recommended Video

    அரை நிர்வாணம்.. உல்லாசமாக மது குடித்துவிட்டு.. மதுரை காவல் உதவி ஆணையர் செய்யும் வேலையை பாருங்க!

    மதுரை மாநகர், ஆயுதப் படையில் காவல் உதவி ஆணையர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என்று சுமார் ஆயிரம் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் காவல் உதவி ஆணையராக இருப்பவர் சோமசுந்தரம்.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மேலும் இவர் பணியில் இருக்கும் போதும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

    வீடியோ வைரல்

    வீடியோ வைரல்

    இவர் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. சக காவலர்கள் முன்பாக சிறிதும் கூச்சமின்றி உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு ஆயில் மசாஜ் செய்தபடி மது அருந்தும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆயுதப் படை இசைக் குழு

    ஆயுதப் படை இசைக் குழு

    அந்த வீடியோவில் ஆயுதப்படை இசைக்குழுவில் உள்ள காவலர் ஒருவரை புல்லாங்குழல் வாசிக்க உதவி ஆணையர் சோமசுந்தரம் உள்ளாடையுடன் அமர்ந்தபடி மது அருந்தும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    காற்றில் பறந்த கண்ணியம்

    காற்றில் பறந்த கண்ணியம்

    கண்ணியத்தை காக்க வேண்டிய காவல்துறை உயரதிகாரி ஒருவரே இது போன்று காவலர்களை தனது போதைக்காக பயன்படுத்துவதும், சொந்த பணிகளில் ஈடுபடுத்தி இழிவுபடுத்தவது போன்ற இந்த வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியிடமும், பாதிக்கப்பட்ட காவலர்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    தொடரும் ஆடர்லி முறை

    தொடரும் ஆடர்லி முறை

    காவல்துறையில் ஆடர்லி முறை ஒழிக்கப்பட்ட நிலையிலும் இது போன்ற உயரதிகாரிகளால் இன்றளவும் ஆடர்லி முறை செயல்படுவது போன்ற அவலம் தொடர்கிறது என்பது தான் உண்மை. மேலும் ஒவ்வொரு இசைக் கருவிக்கும் ஒரு மகத்துவம் உண்டு. அதை இன்று வரை கடவுளாகவும் சோறு போடும் சாமியாகவும் அதை பயன்படுத்துவோர் பாவிக்கிறார்கள்.

    இசைக் கருவி

    இசைக் கருவி

    இத்தகைய புல்லாங்குழல் இசைக் கருவியை மதுகுடிக்கும் போது ரசிப்பதற்காக இந்த துணை ஆணையர் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சக காவலருக்கும் மரியாதை கொடுக்காமல் தெய்வமாக வழிபட வேண்டிய புல்லாங்குழலின் மகத்துவத்தையும் அறியாமல் இது போல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த இந்த உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+