ஸ்ரீகாந்துக்கு போதை பழக்கம்! இன்னைக்கு நேத்தா இருக்கு! ’அதுவும்’ கெட்ட பழக்கம்.. உடைத்த விஜய் ஆண்டனி
மதுரை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு இருப்பது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல. பல நாட்களாகவே போதைப்பொருள் பயன்பாடு உள்ளது எனவும், காவல்துறை விசாரணை நடைபெறுவதால் கருத்து சொல்லவில்லை என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
போதைப் பொருள் வழக்கு தொடர்பாக பிரதீப் என்பவரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் பிரமுகர் ஆன பிரசாத் என்பவரிடம் போதை பொருள் வாங்கியதாக கூறினார்.
இதை அடுத்து பிரசாத்தை கைது செய்த நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் பல திரைப்பட நடிகர்கள் போதைப்பொருள் வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு 40 முறை போதை பொருளை விற்றதாக கூறினார்.

இதை அடுத்து ஸ்ரீகாந்தை அழைத்து வந்த போலீசார் அவரது ரத்த மாதிரிகளை சோதனைக்காக அனுப்பினார். அதில் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும், போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்த நடிகர்கள் யார் யார்? சினிமா பார்ட்டிகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க இருக்கின்றனர். இதற்காக ஸ்ரீகாந்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தையும் நாட உள்ளனர்.
தற்போது அவர் சிறையிலடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், தமிழ்திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. புகைப்பிடிப்பதும் போதைப் பழக்கம்தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைப்பொருள் பயன்பாடு என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாகும் திரைப்படம் மார்கன். இந்த படத்தின் ப்ரோமோஷன் விழா மதுரை சின்ன செட்டிகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விஜய் ஆண்டனி செய்தியாளர்களிடம் பேசுகையில்," மதுரையை பொறுத்து கதைக்களம் அமைந்தால் படம் நடிப்பேன். மதுரை மக்களின் இயல்பு அன்பு மிகவும் பிடிக்கும். எத்தனை ஏஐ வந்தாலும் இதயத்தை தொடும் பாடல்களை உருவாக்க முடியாது. இயக்குநர் உடனான நட்பின் அடிப்படையில் மார்கன் படத்தை நானே தாயரித்துள்ளேன். சக்தி திருமகன் திரைப்படத்திற்கு பின்பு அனனைத்து நடிகர்களுக்கும் இசையமைக்க திட்டமிட்டுள்ளேன்.
மற்ற நடிகர்களையும் வைத்து தயாரிக்க இருக்கிறேன். மேலும், போர் மிகவும் தவறானது. மிகவும் வருத்தமாக உள்ளது. காஸாவில் குழந்தைகள் கதறுவது மனதுக்கு வேதனை தருகிறது. போரை அறிவிப்பவர்கள் சண்டை செய்யட்டும். அப்பாவி மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது. நடிகர்கள் ஆளக்கூடாது என விதியல்ல. நடிகர்கள் ஆளக்கூடாது என விதி எதுவுமில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றோர் ஆண்டுள்ளனர். தனிப்பட்ட செல்வாக்கு மக்கள் ஆதரவு இருந்தால் ஆளலாம். நான் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.
மேலும், திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. புகைப்பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதனுடைய அடுத்த கட்டம் தான் போதைப்பொருள் பழக்கம். நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை விசாரணை நடைபெற்று வருவதால் அதுகுறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications