”கலகமில்லா ஒற்றை தலைமையே ”.. அதிமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய்.. குசும்புக்கார மதுரை ரசிகர்கள்..!

Subscribe to Oneindia Tamil

மதுரை: நடிகர் விஜய்-ன் பிறந்தநாளை முன்னிட்டு அவரை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், தற்போது நடைபெற்று வரும் அரசியல் களேபரங்களுக்கு நடுவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இன்று 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதன்பின்னர் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக, ஏராளமான நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Vijay Birthday Poster by Madurai fans got attention all over Tamilnadu due to AIADMK

கடந்த சில காலங்களாக நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னேற்பாடாகவே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர். இதனைத்தொடர்ந்து கட்சிக்கான வேலைகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு முறையும் தனது படத்தின் விழா மேடையில், விஜய் அரசியல் பேசுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இதனால் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே விஜய்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதனைத்தொடர்ந்து விஜயை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் அதிகளவில் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை அடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்-க்கு அவரது ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் அவரை அரசியலுக்குள் இழுக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், வழக்கம் போல் மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அடித்துள்ள போஸ்டர் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை கூடவுள்ள நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை குறிப்பிடும் விதமாக மதுரை மாவட்ட ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர். அந்த போஸ்டரில், கலகமில்லா எங்களின் ஒற்றை தலைமையே என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே மதுரை மாவட்ட ரசிகர்கள், நடிகர் விஜய்-ஐ, முதலமைச்சர், அண்ணா, எம்ஜிஆர் போல பல்வேறு விதமாக அரசியல் நோக்குடன் போஸ்டர் அடித்து அவரை எப்போதும் அரசியலுடன் நெருக்கமாக வைத்துள்ளனர். தற்போது இந்த போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+