சர்கார் விவகாரம்.. அஜித் ரசிகர்களை மேற்கோள் காட்டிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
Recommended Video

மதுரை: விஜய் ரசிகர் மன்றத்தினர் வீடுகளில் கூட ஜெயலலிதா அரசு கொடுத்த விலையில்லா பொருட்கள் இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் இன்று நிருபர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: சர்கார் திரைப்படத்தில் வைத்த காட்சிகளை போல இனி எல்லா படங்களிலும் காட்சிகளை வைக்க துவங்குவார்கள் என்பதால்தான் எதிர்க்கிறோம்.
இனியாவது திரைத்துறையினர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
['சர்கார்' சட்டம் 49 பிக்கும், தேர்தல் விதி 49 பிக்கும் என்ன வித்தியாசம்! ]

விஜய் ரசிகர் மன்றத்தினர்
ஜெயலலிதா அரசின் இலவச திட்டங்களால் பலன் பெற்றோர் பல கோடி பேர். விஜய் ரசிகர் மன்றத்தினர் வீடுகளில் கூட ஜெயலலிதா அரசு திட்டங்களால் பலன் பெற்றவர்கள் உள்ளனர். மாணவிகளுக்கான இலவச சைக்கிள், மடிக்கணினி உட்பட பல்வேறு திட்டங்களை சொல்ல முடியும்.

அஜித் ரசிகர்கள் வீடுகள்
கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித் என அனைத்து ரசிகர்கள் வீடுகளிலும் ஜெயலலிதா திட்டத்தால் பலன் அடைந்தோர் இருப்பார்கள். ஜாதி, மத பாகுபாடின்றி ஜெயலலிதா எல்லோருக்குமான திட்டங்களை செயல்படுத்தியவர். அவரை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது.

உடனே நீக்க வேண்டும்
திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருமே ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் படத்தை ஏற்க முடியாது என ஒரே குரலில் கூறினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். படத்தில் இடம் பெற்ற சர்ச்சை காட்சிகளை நீக்குவதாக கூறியுள்ளனர். அதை உடனடியாக செய்ய வேண்டும். நீக்க சம்மதித்த படக்குழுவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்காலத்தில் நடக்க கூடாது
மறைந்த தலைவரை வம்புக்கு இழுத்து பேசக்கூடாது. அவர் தெய்வமாகிவிட்டார். அவரது திட்டங்களால் பலன் அடைந்துவிட்டு இப்போது இப்படி பேசுவது சரியான நடைமுறை கிடையாது. சர்கார் போன்ற நிகழ்வுகள் இனி எதிர்காலத்தில் நடக்க கூடாது. இது அன்பான எச்சரிக்கை. இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். ரஜினி, கமல் ஆகிய நடிகர்கள் சர்கார் விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அஜித் எதுவுமே கூறவில்லை. இருப்பினும் அவரையும் மேற்கோள் காட்டி பேட்டியளித்துள்ளார் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications