அழகரைப் பார்க்க வாராரு தளபதி.. மதுரையே குலுங்கப் போகுது! பாண்டிய மண்ணில் தவெக விஜய்! இதுதான் ப்ளான்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற பிம்பத்தை அடித்து நொறுக்கி இருக்கிறார் விஜய். பனையூரை விட்டு வெளியே வர மாட்டேங்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் கோவையில் அவர் நடத்திய ரோட் ஷோ அதிமுக திமுகவையே அதிர வைத்துள்ளது. கோவை கொடுத்த உற்சாகத்தில் மதுரையில் அடுத்த பூத் கமிட்டி மாநாட்டை நடத்துகிறார் விஜய். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல பகுதிகள் இருக்க இரண்டாவதாக விஜய், மதுரையை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கும் விஜய் கள அரசியலுக்கு திரும்பி இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்சி மாநாட்டை தவிர விஜய் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற விமர்சனம் விஜய் மீது முன் வைக்கப்பட்டது.

தொடர்ந்து கள அரசியலுக்கு திரும்பும் வகையில் முதன்முதலாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை விஜய் சந்தித்தார். சென்னையில் இருந்து பரந்தூர் செல்லும் வரை விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தினாலும் சென்னையை தாண்டி விஜய் வரவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

Vijay TVK madurai

இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்ற நிலையில் சென்னையில் இருந்து கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையிலிருந்து கோவைக்கு ஒரு மணி நேரத்தில் விமானத்தில் வந்தாலும் கோவை விமான நிலையத்திலிருந்து அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கும் ஹோட்டலில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபத்திற்கும் விஜய் சென்று வரவே 5 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று விஜயை பார்த்தனர்.

பூத் கமிட்டி மாநாட்டுக்கு ஏஜெண்டுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜயை பார்ப்பதற்காகவே கோவையில் திரண்டனர். அதே நேரத்தில் தமிழகத்தின் பிரதான கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கோவைக்கு வந்திருந்தாலும் விஜய்க்கு கிடைத்த வரவேற்பில் பாதி கூட அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

கோவை கொடுத்த வரவேற்பில் அடுத்ததாக சேலம், சென்னை, நெல்லை, மதுரை என அடுத்தடுத்த மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில் அடுத்ததாக மதுரையில் விஜய் பூத் கமிட்டி மதுரையில் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் தற்போது இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

கோவையில் நகருக்குள் தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றதால் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டனர். அதே நேரத்தில் உள்ளே செல்வதற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மாநாடு போலவே மதுரையில் பூத் கமிட்டி நிகழ்ச்சியை நடத்தலாம் என விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான இடம் பார்க்கும் வேலைகளை மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் இரண்டாவதாக மதுரையை தேர்ந்தெடுக்க என்ன காரணம் எனக் கேட்ட போது நிர்வாகிகள் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது கட்சி மாநாட்டையே முதலில் விஜய் மதுரையில் தான் நடத்த திட்டமிட்டார். எம்ஜிஆர், விஜயகாந்த், கமலஹாசன் என பலர் அங்கு தான் மாநாட்டை நடத்தினர். அதிமுக 2011ல் ஆட்சி அமைக்க மதுரை மாநாடு திருப்புமுனையாக அமைந்தது. தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளும் மதுரையில் இருந்து தான் அரசியல் பயணத்தை ஆரம்பிப்பார்கள்.

விஜயும் அதனையே நினைத்த நிலையில், ஆனால் பல்வேறு கெடுபிடிகள் காரணமாக கட்சியின் முதல் மாநில மாநாட்டை மதுரையில் நடத்த முடியவில்லை. அதனால் கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும் தென் மாவட்டங்களில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை நிரூபிக்க மதுரை மாநாடு முக்கிய கருவியாக பயன்படும் என நினைக்கும் விஜய் தரப்பு விழுப்புரம் மாநாட்டை போலவே மதுரை நிகழ்ச்சியையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+