எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்.. மதுரை தவெக மாநாட்டில் மெகா ட்விஸ்ட்! மேடையில் சிரிக்கும் எம்ஜிஆர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் தவெக மாநாட்டில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், அண்ணாவின் புகைப்படங்கள் மாநாட்டு திடலில் இடம்பெற்றுள்ளன. கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி வந்த விஜய், தற்போது திமுக, அதிமுக தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் மிக பிரம்மாண்டமாக நாளை மறுநாள் நடத்த இருக்கிறார். இதற்காக சுமார் 500 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கிட்டத்தட்ட 98 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விஜய் நேற்று மதுரைக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Vijay s Tamilaga Vetri Kazhagam Conference

விஜய்

கடைசி நேரத்தில் மதுரைக்கு வந்தால் விமான நிலையத்திலிருந்து மாநாட்டுக்குச் செல்லும் வழியில் அதிக அளவில் தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் ஏற்கனவே ரோட் ஷோ உள்ளிட்டவற்றை விஜய் நடத்தக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருக்கும் இடையில் விஜய் முன்னதாகவே மதுரைக்கு வந்ததாகவும், பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது இது ஒரு புறம் இருக்க வழக்கம் போல பிரம்மாண்டத்தை காட்ட வேண்டும் என மாநாட்டு பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம்

மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு, மகளிர் பாதுகாப்பு குழு, மருத்துவ குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கு ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். விஜய் மாநாடு காரணமாக மதுரையில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த மாநாட்டை போலவே பிரம்மாண்ட மேடை, மேடையில் இருந்து மாநாட்டு திடலில் இறுதி பகுதி வரை ராம்ப் வாக் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படியாக கிட்டத்தட்ட கடந்த மாநாட்டை போலவே இந்த மாநாடும் இருக்கும் என சொல்லப்படுகிறது.

தவெக மாநாடு

முதன் முறையாக தனது கட்சியின் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டிருக்கிறது. காரணம் மாவட்ட செயலாளர்கள் நியமனம் மட்டுமே முடிவடைந்திருக்கும் நிலையில் மாநகர், நகர், ஒன்றியம், உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பதவிகள் இன்னும் நிரப்பப்படவில்லை. இதனால் உட்கட்சி விவகாரங்கள் பெரிதாகும் என்பதால் விஜய் வேட்பாளர்கள் அறிமுகத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

எம்ஜிஆர் அண்ணா

இந்த அளவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய அரசியல் நகர்வை விஜய் செய்திருக்கிறார். அதாவது மதுரை மாநாட்டில் இதுவரை இல்லாத வகையில் திமுக நிறுவனர் அண்ணா, அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் ஆகியோருக்கு உருவப்படங்களை மாநாட்டுத் திடலில் அமைத்திருக்கிறார் விஜய். விஜய் முதன்முறையாக கட்சி ஆரம்பித்தபோது கொள்கை பாடலும் கொள்கை தலைவர்கள் குறித்த விவரமும் வெளியிடப்பட்டது. அப்போது தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோர் கட்சியின் கொள்கை தலைவர்களாக இருப்பார்கள் என விஜய் அறிவித்தார்.

தவெக கொள்கை தலைவர்கள்

அதற்கு பிறகு கொள்கை பாடல் வெளியிட்ட போது பின்னணியில் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரது நிழற்படங்கள் மட்டுமே இடம்பெற்றது. அதாவது நேரடியாக அவர்கள் உருவங்கள் இல்லாமல் கருப்பு வண்ணத்தில் மட்டுமே அவர்களது படங்கள் இடம்பெற்று இருந்தது, இந்த நிலையில் மதுரை மாநாட்டில் முகப்பில் விஜய்க்கு இருபுறமும் அண்ணாவும் எம்ஜிஆர் இருப்பது போல முகப்பு அமைக்கப்பட்டிருக்கிறது,

திராவிட அரசியல்

மாநாட்டு முகப்பின் ஓரத்தில் கொள்கை தலைவர்களின் புகைப்படங்கள் மிகச் சிறிய அளவில் இடம் பெற்றிருக்கின்றன. இதுவரை திமுகவுக்கு மாற்று என பேசி வந்த விஜய் முதன் முறையாக அந்த கட்சியின் நிறுவனரான அண்ணாவின் புகைப்படத்தை மாநாட்டு முகப்பில் இடம் பெற செய்திருக்கிறார். மேலும் அதிமுக நிறுவனரான எம்ஜிஆரின் புகைப்படத்தையும் விஜய் மாநாட்டு முகப்பில் இடம் பெற செய்திருப்பது திராவிட அரசியலில் மற்றொரு வடிவம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+