என்ன இருந்தாலும்.. TVK விஜய் இப்படி செய்திருக்ககூடாது! அஜித் படிச்சு படிச்சு சொன்னாரே! இப்போ பாருங்க
மதுரை: மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநாட்டு திடலுக்கு நள்ளிரவில் இருந்தே தொண்டர்கள் குவிய தொடங்கினர். இதற்காக அமைக்கப்பட்டு உள்ள பேனர்களில் சில இடங்களில் நடிகர் அஜித் குமார் போட்டோக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
மாநாடு பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை முடிக்க தவெக திட்டமிடப்பட்டு உள்ளது. தவெக மதுரை மாநாட்டில் விரைவாகவே விஜய் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில், அவனியாபுரம் விமான நிலையம் வழியாக தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்த மாநாட்டுத் திடல் அமைந்துள்ளது. எலியார்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து 2 கி.மீ. தூரத்திலேயே சாலையின் இருபுறமும் தவெக கொடிகள் பறக்க, "மக்கள் விரும்பும் முதல்வர்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அணிவகுத்து நிற்கின்றன.
Tamilaga Vetri Kazhagam Maanadu - சர்ச்சைக்குரிய அஜித் குமார் போட்டோ - தவெக மாநாடு
இதற்காக அமைக்கப்பட்டு உள்ள பேனர்களில் சில இடங்களில் நடிகர் அஜித் குமார் போட்டோக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மதுரையில் அஜித் ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்களையும் கவரும் வகையில் பல இடங்களில் அஜித் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
அஜித் அரசியல் விரும்பாதவர். தன்னுடைய புகைப்படத்தை எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருக்க கூடியவர். இப்படிப்பட்ட நிலையில் அதை மீறி அஜித்தின் புகைப்படத்தை, அவரை போட்டியாக கருதிய விஜயின் கட்சியினர் விளம்பரத்திற்காக பயன்படுத்தியது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழக மாநாடு
மதுரையில் நடைபெறுகிற த.வெ.க. இரண்டாவது மாநில மாநாட்டில் கலந்து கொள்ள தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் 150 க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்லும் 3 ஆயிரம் பேருக்கு மதிய உணவிற்கு சுடசுட சிக்கன் பிரியாணி தயாராகி வருகிறது. தஞ்சை த.வெ.க. மத்திய மாவட்டம் சார்பில் மதுரையில் நடைபெறுகிற இரண்டாவது மாநில மாநாட்டிற்கு புதுக்குடியில் இருந்து சுமார் 150 வாகனங்களில் 3 ஆயிரம் பேர் செல்கின்றனர்.
மகளிருக்கு தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புதுக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் அனைவருக்கும் காலை சிற்றுண்டியாக இட்லி, பொங்கல் பரிமாறப்பட்டன. மதிய உணவாக சுடசுட சிக்கன் பிரியாணி 3 ஆயிரம் பேருக்கு வழங்க தயாராகி வருகிறது. வழியில் களைப்பு நீங்க பிஸ்கட் பாக்கெட், வாட்டர் பாட்டில் வழங்கப்படுகிறது.
விஜய் - தமிழக வெற்றிக் கழக மாநாடு ஏற்பாடுகள்
இன்னும் சற்று நேரத்தில் த.வெ.க. தொண்டர்கள் தஞ்சை மாவட்ட எல்லையான புதுக்குடியில் இருந்து வாகனங்களில் புறப்பட தயாராக உள்ளனர். சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாநாட்டுத் திடலின் பெரும்பகுதி பச்சை விரிப்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேடை நிகழ்வுகளை அனைவரும் காணும் வகையில் 50-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் மாநாட்டுத் திடல் முழுவதும் பொருத்தப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications