சாப்பாட்டுக்காக மதுரையில் ஓடும் ரயிலை நிறுத்திய விஜயகாந்த்! நெகிழ்ந்த கலைஞர்கள்.. அவர்தான் கேப்டன்
மதுரை: கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த விஜயகாந்த் இன்று அதிகாலை காலமானார். அவருடைய இழப்பு சினிமா, அரசியல் துறையினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் குறித்த சில சுவாரசியமான சம்பவங்கள் நினைவுகூரப்பட்டு வருகின்றன. அதில் மதுரையில் சாப்பாட்டுக்காக அவர் ரயிலை நிறுத்தியது எப்போதுமே மறக்க முடியாதது.
கார்கில் போரில் இந்தியா நூற்றுக்கணக்கான வீரர்களை இழந்திருந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள் படுகாயமடைந்திருந்தனர். இவர்களுக்கு நிதி திரட்டும் இயக்கம் நடந்துக்கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் தங்கள் பங்குக்கு திரை துறையினரும் நிதி திரட்ட முடிவெடுத்தனர். எனவே மதுரையில் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்போது திரை துறையில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் உட்பட பலரும் மதுரைக்கு புறப்பட்டனர்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அங்கு திரட்டப்பட்ட நிதியை எடுத்துக்கொண்டு கலைஞர்கள் புறப்பட்டனர். அன்றிரவு அவர்களுக்காக மதுரையிலிருந்து சென்னை நோக்கி வரும் ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டன. நிகழ்ச்சி முடிவதற்கு நேரம் தாமதமானது. இருந்தாலும், அடித்து பிடித்து அனைவரும் ரயிலில் ஏறிவிட்டனர். ரயில் 8 மணிக்கு புறப்பட்டது. ஆனால்.. யாரும் சாப்பிடவில்லை.
புறப்படும் அவசரத்தில் துணி, மணிகளை எடுத்து வைக்கவே நேரம் சரியாக இருந்திருக்கிறது. எனவே உணவு எடுத்துக்கொள்ளவில்லை. ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து மெல்ல புறப்பட்டு பின்னர் வேகமெடுக்க தொடங்கியது. விஜயகாந்த் கலைஞர்களிடம் சாப்பிட்டீர்களா? என்று விசாரித்தார். யாரும் எதுவும் சொல்லவில்லை. இரண்டாவது முறை கொஞ்சம் வேகமாக கேட்டார். எல்லோரும் பள்ளி மாணவர்களை போல ஒரே குரலில், சாப்பிடவில்லை என்று கூறினார்கள்.
அவர்கள் முகத்தில் வடிந்த வியர்வை துளிகள் கூட காயவில்லை. ரயிலை பிடிக்க ஏற்பட்ட பதட்டம் இன்னும் முழுமையாக தணியவில்லை. உடைகள் கலைந்திருந்தன. நிலைமையை விஜயகாந்த் உணர்ந்தார். வரும் அவசரத்தில் உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்பதை புரிந்துக்கொண்டார். பின்னர் குனிந்து ஜன்னலை பார்த்தார். சீரான வேகத்தில் ரயில் சோழவந்தானை நெருங்கிக்கொண்டிருந்தது. தண்டவாளத்தை ஒட்டிய ரோட்டில் கடைகள் தெரிந்தன.
அவ்வளவுதான் என்ன நினைத்தாரோ தெரியவில்லை உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்துவிட்டார். ரயில் சட்டென வேகத்தை குறைத்து நின்றுவிட்டது. இவர் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ரோட்டு கடைகளை நோக்கி ஒட தொடங்கிவிட்டார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. மற்ற கலைஞர்களும் அவர் பின்னாடியே ஓடினர். கடையில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே கொடு என விஜயகாந்த் கேட்டார். கடைகாரருக்கு வந்திருப்பது விஜயகாந்த் என்பதை தவிர வேறு எதுவும் மனதில் ஓடவில்லை.
தன் சட்டை பையில் இருந்தை பணத்தை கத்தையாக அப்படியே எடுத்து கொடுத்துவிட்டு, பாத்திரங்களோடு உணவை எடுத்துக்கொண்டு மீண்டும் ரயிலை நோக்கி நகர தொடங்கிவிட்டார். விஜயகாந்த் வந்திருக்கிறார் என்கிற செய்தி அதற்கு தீ போல பரவி விட்டது. மக்கள் கூட்டம் கூடிவிட்டது. ஆனால் அவர் காத்திராமல் ரயிலை நோக்கி வேகமாக வந்துவிட்டார். அனைவரும் ரயிலில் ஏறிய பின்னர் ரயில் மீண்டும் புறப்பட தொடங்கியது. அன்று சாப்பிட்டதை போல சுவையான உணவை வாழ்நாளில் இதுவரை வேறு என்றுமே சாப்பிட்டது கிடையாது என சக கலைஞர்கள் கூறியுள்ளனர்.
விஜயகாந்த்துடன் பயணித்தவர்களுக்கு இதுபோன்று ஆயிரம் கதைகள் சொல்வதற்கு இருக்கிறது. ஆனாலும் சுருக்கமாக கேமரா இருந்தாலும் அவர் இப்படித்தான் இருப்பார், இல்லாவிட்டாலும் இப்படித்தான் இருப்பார் என்று சொல்லிவிட்டு நகர்வார்கள். இந்த இனிமையான நினைவுகளை அவரது சக கலைஞர்கள், தொண்டர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் தற்போது நினைவுபடுத்தி வருகிறார்கள்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications