இன்னும் ஒரு நாள் தான்.. ஓ பன்னீர்செல்வம் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.. பேட்டியை கவனித்தீர்களா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், எந்த கட்சியிலும் இல்லை... அவர்கள் எந்த சின்னத்தில் போட்டியிட போகிறார்கள் என்பது இன்னமும் உறுதியாகவில்லை.. இதேபோல் தொகுதிகளும் இன்னமும் வெளியாகவில்லை.. இந்நிலையில் எந்தெந்த தொகுதியில் போட்டி என நாளை தெரிவிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்..

பாஜக கூட்டணி கிட்டத்தட்ட இப்போது இருப்பது தான் இறுதி என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.அதிமுக உடன் பாமக இன்று கூட்டணியை உறுதி செய்யப் போவதாக சொல்கிறார்கள். எனவே பாஜக கூட்டணியில் தற்போது உள்ள டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி, மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஆகியவைதான் இறுதி என்கிற நிலை உருவாகி உள்ளது. இதில் தேமுதிக மட்டுமே என்ன முடிவு எடுக்க போகிறது என்பது உறுதியாகவில்லை.

We will announce which symbol and which constituencies will be contested tomorrow O Panneerselvam

பாமக வருமா வராதா என்பதை எதிர்பார்த்து தமிழக பாஜக இன்னமும் தொகுதி எது என்பதை உறுதி செய்யாமல் இருந்து வந்தது. தற்போது பாமக அதிமுக உடன் கூட்டணி அமைக்க போவது உறுதி என்று கூறப்படுவதால், தொகுதிகளை அனேகமாக நாளைக்குள் உறுதி செய்யும் என தெரிகிறது. இந்த முறை பாஜக 25 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் என கூறப்படுகிறது. கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.. இதேபோல் நீலகிரியில் எல்முருகன் போட்டியிடக்கூடும் என்கிறார்கள். கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும், தேனியில் டிடிவி தினகரனும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.

இது ஒருபுறம் எனில் அண்மையில் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக கட்டாயப்படுத்துவதாகவும் இதனால் ஓபிஎஸ் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் வதந்திகள் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ பன்னீர்செல்வம் அதனை திட்டவட்டமாக மறுத்தார்.இதுபற்றி அவர் அப்போது வெளியிட்ட அறிக்கையில், "அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரசாரங்களை, தவறான தகவல்களை தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது நமது விருப்பம். இதனை நான் பலமுறை குறிப்பிட்டு இருக்கிறேன்.

இதனைத்தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பா.ஜனதாவுக்கு நமது ஆதரவை தெரிவித்து உள்ளோம். இதன் அடிப்படையில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அதுபற்றிய விவரங்கள் அனைத்தையும் நானே தெரிவிப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கிடையே பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியிருந்தார்.

இதனிடையே சென்னையில் இருந்து தேனி செல்வதற்காக விமானத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, லோக்சபா தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதே? என செய்தியாளர்கள் கேட்டார்கள்.

அதற்கு பதில் அளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டது போல் தான், தற்போதும் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட சூழலில் உங்களுக்கு எந்தெந்த தொகுதி? எந்த சின்னம்? என அறிவிக்கவில்லையே? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஓ பன்னீர்செல்வம், எந்தெந்த தொகுதிகளில் போட்டி? எந்த சின்னத்தில் போட்டி? என்பதை நாளை(மார்ச் 19) தெரிவிப்போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+