மதுரை அருகே பிரியாணி சாப்பிட வீட்டுக்கு அழைத்து.. 75 வயது மூதாட்டியிடம் அத்துமீறிய இளைஞர் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி அந்த பகுதியில்தனியாக வசித்து வருகிறார். இவருடைய இரண்டு மகன்களும் திருமணம் ஆகி தனியாக வசிக்கிறார்கள்.இந்நிலையில் மூதாட்டியை பிரியாணி சாப்பிட வீட்டிற்கு அழைந்த தங்கப்பன் என்ற இளைஞர் (பெயர் மாற்றம்), பாட்டி என்று கூட பார்க்காமல் செய்த செயல் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. என்ன செய்தார்.. என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி. கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய 2 மகன்களுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று மூதாட்டி அங்குள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கப்பன்(30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாலிபர் கடையின் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது மூதாட்டியிடம் தன் வீட்டில் பிரியாணி வாங்கி வைத்து உள்ளேன். சாப்பிட வருகிறீர்களா? என கேட்டிருக்கிறார் தங்கப்பன்.

Madurai biryani crime

இந்தநிலையில் தங்கப்பனின் வீட்டுக்கு சென்ற மூதாட்டியை, அவர் சாப்பிடுமாறு கூறி தண்ணீர் எடுத்து வைத்துள்ளார். மேலும் தங்கப்பன் சாப்பிடும் வரை அங்கேயே இருந்து அவருக்கு பரிமாறி இருக்கிறார். இதற்கிடையே தங்கப்பன் சாப்பிட்டு முடித்தவுடன் மூதாட்டி வெளியே செல்ல முயன்றார். ஆனால் அவரை வெளியே செல்லவிடாமல் தங்கராமன் மறித்து மூதாட்டியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தாராம்.பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூதாட்டி தன்னுடைய மகன்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஊருக்கு வந்து, சிந்துபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தங்கப்பனை கைது செய்தனர். மதுரையில் மட்டுமல்ல.. கோவையிலும் இதேபோன்ற சம்பவம் கடந்த பிப்ரவரி 5ம்தேதி நடந்துள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் அருகே 78 வயது மூதாட்டி வாழ்ந்து வருகிறார். இவருடைய மகன்கள் திருமணம் முடிந்து வெளியூரில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக பேரூர் அருகே மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். மூதாட்டியின் வீட்டின் அருகே முருகன் (வயது 47) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வசிக்கிறார்.

இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். முருகன் அந்த பகுதியில் இறைச்சி கடை வைத்திருக்கிறார். இதனிடையே மூதாட்டி தனியாக வசித்து வந்ததால் அவ்வப்போது ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அருகில் வசிக்கும் முருகனிடம் கேட்டு வந்தாராம். முருகனும் அவ்வபோது உதவிகள் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

கடந்த இரண்டு வாரம் முன்பு மூதாட்டியின் வீட்டில் உள்ள மின்விளக்கு பழுதாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் புதிய மின்விளக்கு ஒன்றை வாங்கி மாட்டிவிடுமாறு முருகனை மூதாட்டி அழைத்துள்ளாராம். உடனே அவரும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் மீது முருகனுக்கு சபலம் ஏற்பட்டதாம். உடனே மூதாட்டிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

உடனே ஆவேசமான முருகன், மூதாட்டியின் கைகளை கட்டிப்போட்டு, வாயை துணியை வைத்து மூடி பலாத்காரம் செய்துள்ளார். வயது முதிர்வின் காரணமாக, அவரிடம் போராடி மூதாட்டியால் தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அங்கிருந்து முருகன் தப்பித்து ஓடி சென்றுவிட்டாராம். இந்த சம்பவம் வெளி உலகிற்கு தெரிந்தால் அவமானம் என்று கருதிய மூதாட்டி, அதுகுறித்து யாரிடமும் கூறவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முருகன், இரவு நேரங்களில் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். ஒரு கட்டத்தில் பயந்த மூதாட்டி இரவில் வீட்டில் தங்குவதை தவிர்த்துவிட்டு கோவிலில் தங்கி வந்தார். மறுநாள் காலையில் எழுந்து வீட்டிற்கு செல்வது வழக்கமாக வைத்துள்ளார்.

இதை பார்த்த அந்த பகுதி மக்கள், நல்ல வீடு இருந்தும் ஏன் கோவிலில் வந்து தங்குகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். உடனே மூதாட்டி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அவரை பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று நடந்ததை கூறினார்கள். அங்கு மூதாட்டி முருகன் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த முருகனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+