Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிராமணருக்கும், பசுக்களுக்கும் முன்னுரிமை? சரக சபத் சமஸ்கிருத உறுதிமொழியில் இருப்பது என்ன? பின்னணி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மருத்துவ கல்லூரியில் மகிரிஷி சரக சப்த் உறுதிமொழி எடுக்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. அது என்ன மகிரிஷி சரக சப்த் உறுதிமொழி.. அதில் அப்படி என்ன இருக்கிறது.. ஏன் இது சர்ச்சையாகிறது என்று பார்க்கலாம்.

Recommended Video

    மதுரை மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்பு?

    மதுரை மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழியை எடுத்துக்கொண்ட சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மருத்துவ கல்லூரி டீன் இரத்தினவேலு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    அமைச்சர் பிடிஆர் உள்ளிட்டோர் மேடையில் இருக்கும் போதே சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கப்பட்டது பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. இன்னும் வேறு சில மருத்துவ கல்லூரிகளில் இதே உறுதிமொழி எடுக்கப்பட்டதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன.

    விளக்கம்

    விளக்கம்

    இந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை அளித்த விளக்கத்தில், மகிரிஷ் சரக சப்த் உறுதிமொழியை புதிதாக சேரும் மாணவர்கள் எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதைத்தான் உறுதிமொழியாக ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. தமிழ்நாடு மருத்துவ கல்லூரி இயக்குனரகம், மகிரிஷ் சரக சப்த் உறுதிமொழியை எடுக்க கூடாது, இப்போகிரெடிக் உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. அதனால் மகிரிஷ் சரக் சப்த் உறுதிமொழி நாங்கள் எடுத்தோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    சர்ச்சை

    சர்ச்சை

    சரி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் மகிரிஷி சரக சப்த் உறுதிமொழி என்றால் என்ன என்று பார்க்கலாம்.. மகிரிஷி சரகர் வாழ்ந்த காலமும், இவர் ஒருவர்தானா என்பதிலும் வரலாற்று ரீதியாக நிறைய குழப்பங்கள் உள்ளன. பண்டைய கால இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் சரகர் ஆவார். சரக சம்ஹிதா என்ற சரகரின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட உறுதிமொழிதான் இந்த சரகர் உறுதிமொழி ஆகும். இதில் இருக்கும் 8வது பிரிவான விமானஸ்தானம் பிரிவில் இருந்து 8.13 மற்றும் 8.14 உட்பிரிவில் இருந்து இந்த உறுதிமொழி உருவாக்கப்பட்டுள்ளது.

    சமஸ்கிருத உறுதிமொழி

    சமஸ்கிருத உறுதிமொழி

    சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள இந்த வரிகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சில வரிகளுக்கான விளக்கங்கள் பின்வருமாறு. இந்த உறுதிமொழி ஒரு பிராமணரின் முன்னிலையில் முன்னிலையிலும், தீயின் முன்னிலையிலும், மருத்துவர்களின் முன்னிலையிலும் எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

    முடி வெட்ட கூடாது

    முடி வெட்ட கூடாது

    அதேபோல் திருமணம் செய்து கொள்ள கூடாது, முடி வெட்ட கூடாது, தாடி வெட்ட கூடாது, சைவ உணவு சாப்பிட வேண்டும் , வாழ்நாள் முழுக்க சேவை செய்ய வேண்டும் என்றும் இந்த புத்தகத்தில் உள்ள உறுதிமொழியில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சமுதாயத்தில் அனைத்து மக்களுக்கும் சேவை செய்தாலும் பசுக்கள், பிராமணர்களுக்கு இதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அமைச்சர் பிடிஆர் பகிர்ந்துள்ள டிவிட்டிலும் இந்த தகவல் அடங்கி உள்ளது.

    சிகிச்சை கூடாது

    சிகிச்சை கூடாது

    அதேபோல் ஒரு நாட்டின் மன்னரோடு நல்ல உறவில் இல்லாத நபர்களுக்கும், வீட்டை விட்டு வெளியேறிய பெண்களுக்கும் மருத்துவம் செய்ய கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களுக்கு மருத்துவம் பார்க்கும் போது வீட்டு ஆண்கள் உடன் இருக்க வேண்டும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை அப்படியே மதுரையில் இருக்கும் மாணவர்கள் உறுதிமொழியாக எடுக்கவில்லை. இந்த பெரிய உறுதிமொழியை உள்ள மத்திய அரசு பரிந்துரைத்த பாகங்களை மட்டுமே அவர்கள் உறுதிமொழியாக எடுத்துள்ளனர்.

    மதுரை உறுதிமொழி

    மதுரை உறுதிமொழி

    மதுரை மாணவர்கள் எடுத்த உறுதிமொழியில், நான் தனிப்பட்ட வகையில் கட்டுப்பாட்டுடன் இருப்பேன். நேர்மையாக இருப்பேன். என் ஆசிரியருக்கு கீழ்ப்பட்டு நடப்பேன். அவர்களின் மகன்/மகள் நடப்பேன், என் ஆசிரியரின் தேவையை கருதி செயல்படுவேன். மக்களின் நலனுக்கான என்னுடைய அறிவை பயன்படுத்துவேன். நோயாளிகளுக்கு எப்போதும் உதவுவேன், நான் சோர்வாக இருந்தாலும் சேவை செய்வேன்..

     பெண்களுக்கு சிகிச்சை

    பெண்களுக்கு சிகிச்சை

    விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கும்படி நடக்க மாட்டேன். நல்ல உடை உடுத்தி, நல்ல மொழியில் மக்களிடம் பேசுவேன். தொடர்ந்து என்னுடைய அறிவை மருத்துவ துறையில் வளர்த்துக்கொள்வேன். பெண்களுக்கு, வீட்டு ஆண்கள் இல்லாத நேரத்தில் சிகிச்சை தர மாட்டேன். நோயாளிகள் மீது முழு கவனம் செலுத்தி சிகிச்சை கொடுப்பேன் ஆகிய விஷயங்களை மட்டுமே உறுதிமொழியாக எடுத்துள்ளனர்.

    சர்ச்சை கருத்துக்கள் இல்லையா?

    சர்ச்சை கருத்துக்கள் இல்லையா?

    அதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை இவர்கள் உறுதிமொழியை குறிப்பிடவில்லை. இருப்பினும் தேசிய மருத்துவ ஆணையம் இதை கட்டாயம் எடுக்க வேண்டும் என்று கூறவில்லை. நாடாளுமன்றத்தில் அமைச்சர் மன்சுவிக் மாண்டவியா கொடுத்த விளக்கத்திலும், இது கட்டாயம் அல்ல, பரிந்துரைதான் என்று குறிப்பிட்டுள்ளார். இது கட்டாயம் இல்லாத போது வழக்கமாக பின்பற்றப்படும் இப்போகிரெடிக் உறுதிமொழியை ஏன் மாணவர்கள் எடுக்கவில்லை.. கட்டாயம் இல்லாத சமஸ்கிருத உறுதிமொழியை ஏன் எடுத்தனர் என்பதே கேள்வியாகி உள்ளது.

    இப்போகிரெடிக் உறுதிமொழி

    இப்போகிரெடிக் உறுதிமொழி

    இப்போகிரெடிக் உறுதிமொழி என்பது 5வது நூற்றாண்டில் கிரேக்கத்தில் கொண்டு வரப்பட்டது. இதில் சில மாற்றங்கள் செய்து உலக நாடுகள் பல பயன்படுத்தி வருகின்றன. எல்லோருக்கும் சிகிச்சை, நோயாளிகளின் ரகசியம் காப்பது, பாரபட்சம் இன்றி செயல்படுவது ஆகிய குணங்களை இப்போகிரெடிக் உறுதிமொழி பரிந்துரைக்கிறது. இதுநாள் வரை இந்தியாவிலும் இதே உறுதிமொழி பின்பற்றப்பட்டு வந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் சமஸ்கிருத உறுதிமொழியை எடுக்க தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+