மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? ரேஸில் முந்தும் டாக்டர் சரவணன்! எடப்பாடி சாய்ஸ்?
மதுரை: மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்க பலரும் முட்டி மோதி வரும் நிலையில் டாக்டர் சரவணன் ரேஸில் முந்துகிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில் எடப்பாடி பழனிசாமி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக களமிறக்குவது என்பதில் அவர் மும்முரம் காட்ட ஆரம்பித்துள்ளார். கடந்த முறை மதுரையில் போட்டியிட்ட ராஜ் சத்யன் இந்த முறை விருதுநகரில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவர் விரும்பும் விருதுநகர் தொகுதியையே அவருக்கு அதிமுக தலைமை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் அதிமுக வேட்பாளராக களமிறங்க முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இவரது ஆர்வத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் அணை போடாமல் நம்பிக்கை அளித்து வருகிறார். சரவணனை பொறுத்தவரை தாம் சார்ந்த அகமுடையார் சமுதாயக வாக்குகள் தன்னை கரைசேர்க்கும் என எண்ணுகிறார். அதுமட்டுமல்ல மதுரை மாவட்ட மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் பரிச்சயமும் தன்னை வெல்ல வைக்கும் என நம்புகிறார்.
இதற்கு மத்தியில் சரவணனை ஓரங்கட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனக்கு நெருக்கமான ஒவரை வேட்பாளராக களம் இறக்க காய் நகர்த்துகிறார். இதனிடையே வேட்பாளரின் செல்வாக்கு, சமுதாய பலம், பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களை ஆராய்ந்து அதற்கேற்ப வேட்பாளரை ஃபைனல் செய்யும் திட்டத்தில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மதுரை மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா என 3 கோஷ்டிகள் உள்ளன. வெளியே பார்ப்பதற்கு மூவரும் சிரித்து சிரித்துப் பேசி ஒற்றுமையாக இருப்பது போல் தெரிந்தாலும் தேர்தல் என வரும் போது உள்ளடி வேலைகள் செய்வார்களோ என்ற சந்தேகம் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ளது. இதனால் மற்ற தொகுதிகளை காட்டிலும் மதுரைக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications