Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பத்திக்கிச்சு".. மனைவியின் தகாத உறவு.. "சங்கடமா இருக்கு சார்".. கலங்கிய கணவன் தற்கொலை.. பகீர் ஆடியோ

புகார் கொடுக்க ஸ்டேஷன் சென்றபோது மனைவிக்கும் எஸ்ஐக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

மதுரை: போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்ற மனைவிக்கும், புகாரை வாங்கிய எஸ்ஐ-க்கும் திடீரென தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இதை அறிந்த மனம் நொந்துபோன கணவன் தற்கொலை செய்துள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் உண்டுபண்ணி வருகிறது.

மதுரை எச்எம்எஸ் காலனியைச் சேர்ந்தவர் கணேசன்.. இவருக்கு திருமணம் நடந்து 8 வருடங்கள் ஆகிறது.. மனைவியை உயிருக்குயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.. தம்பதி இருவருமே மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் 2 நாள்களுக்கு முன்பு கணேசன் திடீரென தற்கொலை செய்துகொண்டார்... எனவே இந்த தற்கொலையில் சந்தேகம் உள்ளதாகவும், இதன் பின்னணியில் போலீஸ் எஸ்ஐ ஒருவருக்கு இருக்கிறார் என்று கணேசனின் உறவினர்கள் கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர்.

 தகாத உறவு

தகாத உறவு

இந்த புகாரின்பேரில் விசாரணை துவங்கியது.. அப்போதுதான் அனைத்து உண்மையும் வெளியே வந்தது.. கணேசனுக்கும் அவர் மனைவிக்குமிடையே சமீபகாலமாக வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. இந்த குடும்ப சண்டையால், எஸ்எஸ் காலனி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த எஸ்ஐயிடம் புகார் கொடுக்க மனைவி சென்றுள்ளார்.. இப்போது இந்த எஸ்ஐ, உளவுத்துறையில் புரமோஷன் பெற்று பணியாற்றி வருகிறாராம்.. ஆனால், அன்று எஸ்ஐயாக இருந்தவரிடம் கணேசனின் மனைவி புகார் தொடர்ந்திருந்த நிலையில்தான் கணேசன் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கணேசன்

கணேசன்

புகார் கொடுக்க போன மனைவிக்கும், எஸ்ஐக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.. மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கணேசன் அதுகுறித்து கண்காணிக்கும்போதுதான், மனைவியின் தவறான நடவடிக்கை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.. இது அவரது நிலைகுலைய வைத்துவிட்டதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, கணேசன் குற்றம்சாட்டப்படும் எஸ்ஐயிடம் பேசிய ஆடியோ ஒன்று சோஷியல் மீடியாவிலும் வெளியாகி பரபரப்பை கூட்டி உள்ளது. அந்த ஆடியோ இதுதான்:

ஆம்பளை

ஆம்பளை

கணேசன்: வணக்கம் சார்... புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் இப்படி பண்ணலாமா? பேசுவதில் தப்பில்லை, ஆனால், பேசுகின்ற விஷயம் தப்பாக உள்ளது. குடிப்பவன் ஆம்பளை இல்லை என்று பேசனீங்க.. ஆனால் நீங்கள் இப்படி பண்ணினால் என்ன அர்த்தம்?

எஸ்.ஐ: தப்பாக இருந்தால் மன்னிச்சுடு.. இனிமேல் அப்படி நடக்காது.

கணேசன்: நான் விரும்பி தேர்ந்தெடுத்த வாழ்க்கை... ஒரேயொரு பிள்ளை எனக்கு.. தண்ணி அடித்து விட்டு அவளுடன் சண்டை போட்டது உண்மைதான்... அதுபற்றி உங்க கிட்ட புகார் செய்யத்தானே வந்தாள்? அவளிடம் நீங்க இவ்வளவு தூரம் பேசி பழகினால் எனக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும்... இன்னைக்கு காலையிலிருந்து 2 பேரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறீங்க.. நீங்கள் பேசிய எல்லா விஷயங்களும் எனக்கு தெரியும். அவள் என்னிடம் இப்போதுவரை இதை மறைக்கிறாள்.. பொய் சொல்கிறாள். ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு சார்.

எஸ்.ஐ: நடந்த விஷயங்களை மறந்துவிடு. இனி அப்படியெல்லாம் நடக்காது..

கணேசன்: தயவுசெய்து அவ கிட்ட தொடர்பை விட்டுவிடுங்க.. எங்க வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம்... உங்கள் வீட்டில் நடப்பது எல்லாம் எனக்கும் தெரியும். நேரில் வந்து பேச, எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது... உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்... இத்தோடு விட்டுவிடுங்க.

எஸ்.ஐ: சரி, இனி அப்படி நடக்காது... உன் குடும்பத்தை சரியாக பார்த்துக்கோ

கணேசன்: புகார் கொடுக்க வந்தவளை நீங்க இப்படி பயன்படுத்தியிருக்கக் கூடாது.. இந்த விஷயத்தை வெளிப்படையாக பேசி அவமானப்பட விரும்பவில்லை. இனி மெசேஜ் எதுவும் வேண்டாம்.

எஸ்.ஐ: இனி உன் குடும்பத்தை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்... என்னை மன்னிச்சிடு

பரிதாபம்

பரிதாபம்

இப்படி அந்த ஆடியோ உள்ள நிலையில், அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.. இது குறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "இது குறித்து வந்த புகாரை விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்... அதனால், இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யபடுகிறது. குற்றம்சட்டப்படும் எஸ்ஐயிடமும் கணேசன் குடும்பத்தினரிடமும் விசாரணை நடந்து வருகிறது." என்றனர்.. தற்கொலை செய்து கொண்டுள்ள கணேசன், உயிருக்குயிராக மனைவியை நேசித்து வந்துள்ளதாக சொல்கிறார்கள்.. புகார் கொடுக்க சென்றபோது, எஸ்ஐ-க்கும் மனைவிக்கும் இப்படி ஒரு பகீர் உறவு ஏற்பட்டதை அறிந்து, அதிர்ச்சியானதுடன், மனம் நொந்துபோய், இந்த முடிவை கணேசன் எடுத்ததாகவும் தெரிகிறது.. விசாரணையும் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+