சாத்தான்குளம் கொடூரம்! 9 போலீஸாருக்கும் இரட்டை மரண தண்டனை ஏன்! வழக்கறிஞர் விளக்கம்
மதுரை: சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இரட்டை மரண தண்டனை கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பாதிக்கப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர் ஜெயசிங் விளக்கம் கொடுத்துள்ளார்.
2020 ஜூன் 19 அன்று, தூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமீறல் குற்றச்சாட்டில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட இவர்கள், பின்னர் மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, வழக்கு மத்திய புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ) விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து, சார்பு ஆய்வாளர் பால்துரை ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பால்துரை ஏற்கனவே உடல்நல பிரச்சனையால் இறந்துவிட்டார். மீதியுள்ள 9 பேரும் இந்த வழக்கை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது 6 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதான 9 போலீஸாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
இவ்வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், கடந்த மார்ச் 23 அன்று இந்த 9 காவலர்களும் குற்றவாளிகள் என உறுதி செய்தது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று காலை 10:30 மணிக்குத் தண்டனை குறித்த விசாரணை தொடங்கி, பிற்பகல் 3:30 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 5.30 மணிக்கு தண்டனை விவரங்கள் வெளியானது. 2427 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்த நிலையில் தற்போது மேலும் கூடுதலாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை வாசித்த நீதிபதி, இது சாதாரண குற்றமல்ல. நிராயுதபாணியாக இருந்தும் இருவரையும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அரிதினும் அரிதான வழக்கு. மரண தண்டனை கொடுப்பதா என ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. ஆயுள் தண்டனை காவல் துறைக்கு ஒரு அச்சத்தை ஏற்படாது. தந்தை, மகன் ஆகியோரை நிர்வாணப்படுத்தி கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தந்தை மகனுக்கு செய்த கொடூரங்களை படிப்பதற்கே பதைபதைக்கிறது என்றார்.
இந்த தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட தரப்பின் வழக்கறிஞர் ஜெயசிங் கூறுகையில், தந்தை, மகன் ஆகியோரை அடித்தே கொன்றதால் இந்த வழக்கில் தனித்தனியே 9 காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications