6 நாட்கள் கேப்.. மிஸ் ஆக கூடாது! இடையில் பறந்த உதயநிதி.. ஸ்டாலினே கையில் எடுத்த "சவுத்" அசைன்மென்ட்!
மதுரை: முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம்தான் மதுரைக்கு சென்ற நிலையில், இந்த வாரம் மீண்டும் அவர் மதுரைக்கு செல்வது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாடு கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. முக்கியமாக ஆளும் திமுக சார்பில் அதிக இடங்களை பிடிக்க இப்போதே வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
கொங்கு மண்டலத்தில் அதிக எம்பி இடங்களை எப்படியாவது எடுக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக அவ்வளவு சிறப்பாக செயலாற்றவில்லை.
ஆனால் அதன்பின் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தை திமுக மொத்தமாக கைப்பற்றியது.

திமுக போகஸ்
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கொங்கு மண்டலத்திற்கு சென்று அங்கு ஆய்வுகளை செய்தார். கோவைக்கு அடிக்கடி சென்று சந்திப்புகளை நடத்தினார். திமுகவை வளர்க்கும் விதமாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியும் நியமிக்கப்பட்டார். கோவையில் பாஜக, அதிமுக வளர்வதை தடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் இந்த சந்திப்புகளை அடிக்கடி மேற்கொண்டார். இப்படி கொங்கு மண்டலத்தில் அதிகம் கவனம் செலுத்தியதால் தென் மண்டலத்தில் திமுக பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

திமுக கவனம்
தென் மண்டலத்தில் திமுக வலிமையாக இருக்கும் கட்சி என்பதால் அங்கு பெரிதாக திமுக கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில்தான் கடந்த இரண்டு வாரங்களாக தென் மண்டலத்தில் மீண்டும் திமுக கவனம் செலுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி வைத்தார். அதன்பின் நெல்லைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு அரசு சார்பாக மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த நிலையில் மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்வர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை
இந்த பயணம் முழுக்க தென் மண்டல நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்தார். அங்கே நிலவும் உட்கட்சி பூசல் குறித்து பேசினார். நிர்வாகிகள் இடையே இருக்கும் மோதல் பற்றி ஆலோசனை செய்தார். முக்கியமாக மதுரையில் மூர்த்தி வீட்டு திருமணத்திற்கு செல்லும் முன் அதிகாலையில் கூட முதல்வர் ஸ்டாலின் முக்கிய மீட்டிங்கை நடத்திவிட்டு, மதுரை அரசியல் குறித்து கேட்டு தெரிந்துவிட்டுதான் சென்றார். இதையடுத்து இடையில் உதயநிதி ஸ்டாலினும் தென் மண்டலத்திற்கு பயணம் மேற்கொண்டார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதையை செய்தார்.

உதயநிதி
தேவேந்திர குல வேளாளர் பிரிவை சேர்ந்த இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் தென் மண்டலத்தில் முக்கியமான ஒன்றாகும். இவர்களிடம் நன்மதிப்பை பெறும் வகையில் உதயநிதியை ஸ்டாலின் அனுப்பியதாக கூறப்பட்டது. தென் மண்டலத்தில் இவர்கள் முக்கிய வாக்கு வங்கி என்பதால், உதயநிதியை ஸ்டாலின் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு செல்கிறார். மதுரைக்கு சென்று வெறும் 6 நாள் கேப்பில் அவர் மீண்டும் மதுரைக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.

என்ன காரணம்
நாளை காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க அவர் சென்றாலும், இன்று அவர் மாலை அவர் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இன்று மாலை அவர் அரசினர் விருந்தினர் மாளிகையில் கட்சி நிர்வாகிகளைத்தான் சந்திக்க உள்ளார். உட்கட்சி பிரச்சனை, உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை இதில் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அதோடு கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்துவிட்டு, தென் மண்டலத்தில் வாக்குகளை இழக்க கூடாது என்பதால் தென் மண்டலம் மீதும் இனி அடிக்கடி கவனம் செலுத்தும் அசைன்மென்ட்டையும் முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications