சூத்திரன் அல்லாத எச்.ராஜாவுக்கு ஏன் ஆத்திரம் வருது?- ஆ.ராசாவுக்காக வரிந்துகட்டி இறங்கிய திருமாவளவன்!
மதுரை : உங்கள் நம்பிக்கையான வர்ணாசிரம தர்மத்தின்படி சூத்திரன் அல்லாத எச்.ராஜாவுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக எம்.பி ஆ.ராசா, இந்துக்களில் சூத்திரர்கள் பற்றி மனு தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜகவினரும், இந்து அமைப்புகளும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும், ஆ.ராசா பேச்சைக் கண்டித்திருந்தார். இந்நிலையில், ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து, எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் திருமாவளவன்.

ஆ.ராசா - தணியாத சர்ச்சை
சமீபத்தில் சென்னையில் நடந்த திராவிடர் கழக நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, "இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் தான், நீ பஞ்சமன் தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டதகாதவன். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. இன்னும் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளாது. இந்து மதம் குறித்து இழிவாகப் பேசிய ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் கூறி வருகின்றனர்.

கொந்தளித்த எச்.ராஜா
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திமுக எம்பி ஆ.ராசா அநாகரிகமான முறையில் இந்துக்களை விபச்சாரியின் மகன் என்று கூறி வருகிறார். இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய ஆ.ராசா மீது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெகுஜன விரோதியான ஆ.ராசாவை, திமுகவில் இருந்து மு.க.ஸ்டாலின் நீக்க வேண்டும். இது போல் வேறு மதத்தவரை பேசி இருந்தால் ஸ்டாலின் அரசு சும்மா இருக்குமா? உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என கடுமையாகச் சாடியிருந்தார்.

திருமா பதிலடி
இந்நிலையில், ஆ.ராசாவை கடுமையாக விமர்சித்த எச்.ராஜாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "ஆ.ராசா மனு தர்மத்திலுள்ள செய்தியை எடுத்து மேற்கோள் காட்டிச் சொன்னார். இந்து என்று ஒப்புக் கொண்டால் சூத்திரன் என்று ஒப்புக்கொள்ள வேண்டி வரும். சூத்திரன் என்று ஒப்புக் கொண்டால் அதற்கு மனு தர்மம் என்ன பொருள் தருகிறதோ அதனை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே நான் இந்து இல்லை என நீ ஏன் சொல்லக் கூடாது என்று சூத்திரர்களை பார்த்து சூத்திரர்களாக இந்த சமூகம் அடையாளப்படுத்தப்படுபவர்களை பார்த்துச் சொன்னார்.

சூத்திரர்களை நோக்கிச் சொன்னார்
அது தலித் மற்றும் பழங்குடியினருக்கு பொருந்தாது. பிராமணர், சத்திரியர், வைசியர் என்பவர்களுக்கும் பொருந்தாது. இந்து சமூகத்தில் உள்ள நான்காம் வர்ணத்தைச் சார்ந்த சூத்திரர்களை நோக்கி அந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது. ஏனென்றால் அந்த வர்ணாசிரம தர்மம் வெளிப்படையாக சொல்கிறது, சூத்திரர் என்றால் அப்பன் பெயர் தெரியாதவர்கள், வேசியின் பிள்ளைகள். இதைத்தான் அவர் மேற்கோள் காட்டி இருக்கிறார்.

உங்களுக்கு ஏன் ஆத்திரம்
லிங்காயத்துக்கள் நாங்கள் இந்துக்கள் இல்லை என்று எப்படி துணிச்சலாக சொல்லுகிறார்களோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முன் வந்திருக்கிறார்களோ, அப்படி சூத்திரர்களாக இருப்பவர்களும் முன்வர வேண்டும் என்று பெரியார் பேசியதை அம்பேத்கர் பேசியதை அவர் மீண்டும் சொல்லி இருக்கிறார். நானும் அதை பேசி வருகிறேன். ஆனால், இவர்கள் சனாதனிகள் குறிப்பாக சூத்திரர் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. எச்.ராஜா சூத்திரரா? உங்கள் நம்பிக்கையான வர்ணாசிரம தர்மத்தின் படி சூத்திரன் அல்லாத எச்.ராஜாவுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது?" என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications