பல முறை சொல்லியாச்சு... மணி திருந்தலை.. மரக்கட்டையாலேயே போட்டு தள்ளிய மனைவி வள்ளி!
குடும்ப பிரச்சனையில் கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்
கூடலூர்: பல முறை சொல்லியாச்சு... மணி திருந்தலை.. அதான் மரக்கட்டையாலேயே போட்டு தள்ளிவிட்டார் மனைவி வள்ளி!
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை அருகே உள்ள ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் மணி. இவருக்கு வயது 31. இவரது 28 வயது மனைவி வள்ளி

கூலி தொழிலாளியான மணி, சரிவர வேலைக்கு போகாமல் இருந்துள்ளார். 2 நாளைக்கு முன்னாடி, தண்ணி அடித்து விட்டு கீழே விழுந்துவிட்டதாக கூறி, உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார் மணியின் உடலில் நிறைய ரத்த காயங்கள் இருந்ததை பார்த்தனர். அதனால் சாவில் மர்மம் இருப்பதாக நினைத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.
மனைவி வள்ளியை அழைத்து இதை பற்றி விசாரித்தால், ஆரம்பமே உளறலாக இருந்தது. அதனால் தங்கள் பாணியில் விசாரிக்கவும், மொத்த விஷயத்தையும் கொட்டி விட்டார். அப்போது வள்ளி சொன்னதாவது:
"அடிக்கடி குடிச்சிட்டு வீட்டுக்கு வருவார். எவ்வளவோ சொல்லியும் குடிப்பழக்கத்தை நிறுத்தல. 2 நாளைக்கு முன்னாடி கூட, 200 ரூபாய் கொடுத்து அரிசி வாங்கிட்டு வர சொன்னால், அந்த பணத்திலும் குடிச்சிட்டு வந்துட்டார். அதனால் தகராறு வந்தது. அப்போ ஆத்திரத்தில், பக்கத்தில் கிடந்த மரக்கட்டையை எடுத்து அவரை அடிச்சிட்டேன்.
உடம்பெல்லாம் காயமாகி இறந்துட்டார். கொலையை மறைக்கதான், என் சொந்தக்காரங்க கிட்ட, போதையில கீழே விழுந்துட்டாருன்னு சொன்னேன்" என்றார். இதையடுத்து வள்ளியை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications