வரதட்சணை கொடுமை.. செல்போனில் அந்தரங்க வீடியோக்கள்.. ஆபாச மெசேஜ்கள்.. காவலர் மீது மனைவி புகார் !
மதுரை: வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவரின் செல்போனில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததற்கான அந்தரங்க வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மதுரை நாராயணபுரம் சிவமணி தெருவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சுபாஷினி. இவருக்கும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ராஜமாணிக்கம் என்பவரது மகன் முத்துசங்கு என்ற காவலருக்கும் கடந்த 08.09-2019 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்தின் போது முத்து சங்கு சார்பு ஆய்வாளராக வேலை செய்கிறார் என பொய் சொல்லி உள்ளதாக தெரியவருகிறது. திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 25 பவுன் தங்க நகைகள் பெண் வீட்டின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது,

3 மாதம்
இதனைத் தொடர்ந்து திருமணமான 3 மாதத்தில் மேலும் வரதட்சணை பணம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து தனித்தனியாக இருந்துள்ளனர். மேலும் காவலர் முத்துசங்கு மீது தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2020-ம் ஆண்டு புகார் செய்யப்பட்டது.

10 நாட்கள்
ஆனால் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பாதுகாப்பு பணியில் இருப்பதாக கூறி புகாருக்கு பதில் கூறாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் காவலர் முத்து சங்கு தனது பெற்றோருடன் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

வீடியோ
இதனை நம்பி கணவருடன் சென்ற சுபாஷினியை பல்வேறு வகையில் பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளார். அவரது மொபைல் போனை சுபாஷினி ஆய்வு செய்த போது பல பெண்களுடன் ஆபாசமாக பேசியது, ஆபாசமாக மெசேஜ் அனுப்பியது என பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததும், ஆபாசமான படங்களையும் வீடியோக்களையும் பல பெண்களுக்கு ஷேர் செய்து பேசி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

விசாரணை
இதனைத் தொடர்ந்து சுபாஷினி நேற்று மதுரை மாநகர காவல் ஆணையரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கணவர் முத்து சங்கு மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications