மதுரை எல்ஐசி பெண் மேலாளரை கொன்றுவிட்டு தீ விபத்து போல் நாடகம்.. ஒரு மாதம் கழித்து உதவி மேலாளர் சிக்கியது எப்படி?
மதுரை: மதுரை எல்.ஐ.சி அலுவலத்தில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி பெண் மேலாளர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காப்பீடு முறைகேட்டை விசாரித்ததால் ஆத்திரம் அடைந்த உதவி மேலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் அலுவலகத்தில் வைத்தே பெட்ரோ ஊற்றி மேலாளரை எரித்து கொலை செய்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
தன் அம்மா உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தீயில் எரிந்து உடல் கருகிய பெண் மேலாளரின் மகன் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் இந்த கொடூர சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

பாலிசி அறிமுக கூட்டம்
மதுரை மேலவெளி வீதியில் எல்.ஐ.சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி இரவு 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. உடனடியாக தீயணைப்பு துறையின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அப்போது உள்ளே இருந்த முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், எல்.ஐ.சி. அலுவலகத்திலன் 2வது மாடியில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி எல்.ஐ.சி. பாலிசி அறிமுக கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி, உதவி மேலாளர் ராமகிருஷ்ணன்,, ஊழியர்கள், ஏஜெண்டுகள் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டம் முடிந்ததும் ஊழியர்கள், ஏஜெண்டுகள் வீட்டுக்கு புறப்பட்டனர்.
பெண் மேலாளர் உடல் கருகி பலி
ஆனால் கல்யாணி நம்பி, ராமகிருஷ்ணன் ஆகியோர் கடைசியாக அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்ற நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சற்று நேரத்தில் அலுவலகம் முழுக்க தீ பரவியுள்ளது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய படி கிடந்த ராம கிருஷ்ணனை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று அலுவலகத்திற்குள் இருக்கையின் அடியில் கல்யாணி நம்பி உடல் கருகி இறந்து கிடந்ததாக போலீசார் கூறினர். மேலும் விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே தான், கல்யாணி நம்பியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மகன் லட்சுமி நாராயணன் போலீசிபு புகார் அளித்தார். அதாவது அன்று என் அம்மா இறப்பதற்கு முன்பாக எனக்கு போன் செய்தார்.
காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள் என்று கூறினார்
அப்போது அவர் என்னை காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. போலீசாரை அழைத்து வாங்க.. என்று சொன்ன வார்த்தையையே கூறி கதறினார்.. உடனே நான் அங்கு வந்து பார்த்தேன். ஆனால் அதற்குள் அவர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் உடல் கிடந்த அறையானது இரும்பு சங்கிலியால் பூட்டப்பட்டு இருந்தது. எனவே இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் அன்று நடந்த மீட்டிங்கில் யார் யாரெல்லாம் கலந்துகொண்டார்களோ அவர்கள் ஒவ்வொரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ராமகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
எரித்து கொன்ற உதவி மேலாளர்
இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கல்யாணி நம்பியை அவர் தான் பெட்ரோல் ஊற்றி எரித்தது வெளிச்சத்துக்கு வந்தது. "விபத்து தொடர்பான காப்பீடு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் பல முறைகேடுகள் நடந்து இருப்பதாக கல்யாணி நம்பிக்கு புகார் கிடைத்தது. இந்த முறைகேட்டில் ராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக தான் அன்று நடந்த கூட்டத்தின் போது, ராமகிருஷ்ணனிடம், கல்யாணி நம்பி விசாரித்து இருக்கிறார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து கல்யாணி நம்பியை ராம கிருஷ்ணன் தாக்க முயன்றுள்ளார். இருந்தாலும் நான் இது குறித்து புகார் செய்வதாக கூறியதால் எல்லாரும் சென்ற பிறகு கல்யாணி ரம்பியுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அவர் ஜெனரேட்டர் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த பெட்ரோலை எடுத்து வந்து அலுவலக அறையில் இருந்த கல்யாணி நம்பி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
கொலை வழக்காக மாற்றம்
பின்னர் அந்த அறையையும் பூட்டி உள்ளார். இதனால் உடல் முழுவதும் பலத்த காய மடைந்த கல்யாணி நம்பி சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார். இந்த விஷயத்தில் தன் மீது சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காக அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது போல அனைவரும் நம்ப வைப்பதற்காக அறைக்கு வெளியே மற்ற பகுதிகளிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அப்போது தான் அவர் மீதும் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி திலகர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications