மகள் மீது கோபம்.. மனைவி மீது கொடூரமாக காட்டிய 70 வயது தாத்தா.. ஆடிப் போய் கிடக்கும் பூலாம்பட்டி
மனைவியின் தலையை துண்டித்த கணவன் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

மதுரை: 70 வயது பெரியவருக்கு இவ்வளவு கோபமா? மதுரையே மிரண்டு கிடக்கிறது இவரது செயலால்!!
திருமங்கலம் அடுத்த பேரையூர் அருகில் உள்ளது பெரிய பூலாம்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்தான பெத்தண்ணன். வயசு 70. இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.
மகளுக்கு திருமணமாகிவிட்டது. இருந்தாலும் அவரது மாமியார் வீடு அருகில்தான் உள்ளது. அடிக்கடி அம்மா வீட்டுக்கு மகள் வந்து செல்வது வழக்கம். அப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு வந்தபோது, வீட்டிலிருந்த ஒரு பொருளை தன் மாமியார் வீட்டுக்கு மகள் எடுத்து சென்றுள்ளார்.

மனைவியிடம் தகராறு
இதுதான் பிரச்சனையே.. இங்குதான் விவகாரம் ஆரம்பித்திருக்கிறது. எப்படி இந்த வீட்டிலிருந்து அந்த வீட்டுக்கு பொருளை கொண்டு செல்லலாம் என்று பெத்தண்ணன் கோபப்பட்டுள்ளார். இதனால் மாரியம்மாளிடம் சண்டைக்கு போய் உள்ளார். இன்னொரு முறை வீட்டுக்கு வந்து மகள் எந்த பொருளையும் கொண்டு செல்லக்கூடாது என்று கண்டித்தார்.

வெறுப்பான மாரியம்மாள்
நாட்கள் கடந்தாலும், பெத்தண்ணனுக்கு இன்னும் கோபம் போகவே இல்லை. இந்த விஷயத்தை வைத்துகொணடே மாரியம்மாளிடம் தகராறு போய் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் வெறுத்துபோன மாரியம்மாள், தன் அம்மா வீட்டுக்கு கோபத்தில் கிளம்பி போய்விட்டார். பெத்தண்ணன் இதையும் ஒரு பிரச்சனை ஆக்கினார்.

நேற்றும் தகராறு
அதனால் மாரியம்மாளுக்கு அட்வைஸ் செய்து அவரது வீட்டினர் திரும்பவும் பெத்தண்ணனிடமே அனுப்பி வைத்தனர். நேற்றுதான் வீட்டுக்குள் நுழைந்தார். வந்ததும் சண்டையை ஆரம்பிச்சிட்டார் பெத்தண்ணன். வாக்குவாதம், தகராறு முற்றி களைத்து போய் மாரியம்மாள் தூங்கியே விட்டார். ஆனாலும் பெத்தண்ணனுக்கு கோபம் சீக்கிரத்தில் போய்விடுமா என்ன?

தலை துண்டானது
அதனால் அரிவாளை கொண்டு வந்து மாரியம்மாளின் தலையை தூங்கி கொண்டிருக்கும்போது வெட்டினார். இதில் மாரியம்மாள் தலை துண்டாகிவிட்டது. தகவலறிந்து வந்த பேரையூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பெத்தண்ணனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications